India Languages, asked by StarTbia, 1 year ago

1. திருக்குறளில் _______ அதிகாரங்களும்___________ குறட்பாக்களும் உள்ளன
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
Chapter2 திருக்குறள் -
Page Number 9 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:

திருக்குறளில் 133 அதிகாரங்களும்  1330  குறட்பாக்களும் உள்ளன

விளக்கம்:

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம்  ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல். “அறம், பொருள், இன்பம்”, ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. 


முப்பால்களாகிய ஆகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’ என்றும் “திருக்குறள்” என்றும் இது பெயர் பெற்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது.

Similar questions