India Languages, asked by StarTbia, 1 year ago

1 காணி நிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன யாவை?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter2 இயற்கை TNSCERT Class 6

Answers

Answered by sakthivel1432007
24

Answer:

Explanation:

முன்னுரை

பாரதியார் தேசபக்திக் கவிதைகளை மட்டுமன்றித் தெய்வபத்திப் பாடல்களையும் பாடியுள்ளார். எல்லை கடந்து பேரருட் பிழம்பாய் நிற்கும் இறைவனின் படைப்பு மேன்மையினைப் பாடி நிற்கிறார். பாரதியாருக்கு அன்னை பராசக்தியிடம் அளவிலா அன்புண்டு. எனவே, தம் மன வேட்கையினை அழகிய மாடலொண்றிலே அற்புதமாய் வடித்துக் காட்டுகின்றார் .

வசந்த மாளிகை

தனக்கென காணி அளவு நிலம் வேண்டும். அந்நிலத்தில் அழகிய ஒரு மாளிகை அமைத்து தரவேண்டும். அந்த மாளிகை பல மாடங்களைக் கொண்டதாய் இருக்க வேண்டும். மாளிகையைத் தாங்கி நிற்கும் தூண்கள் தூய்மையினால் ஒளி பொருந்தியவனாய் இருத்தல் வேண்டும்.

இயற்கை சூழல்

வீட்டிற்கு அருகே நீர் மிகுந்த கேணி ஒன்று அமைத்து தர வேண்டும். காற்றில் அசைந்து ஒலி எழுப்பும் கீற்றுகளையும் இன்சுவை இளநீரை கொண்ட காய்களையும் தாங்கி நிற்கும் பத்து பன்னிரண்டு தென்னைமரங்கள் இருத்தல் வேண்டும். இரவில் முத்து போன்ற நிலவின் வெண்ணிற ஒளி வீடு முழுவதும்  புவர வேண்டும். மாலைப் பொழுதில்  இளந்தென்றல் மெல்ல வந்து தம் உள்ளத்தை மகிழ்ச்சி பெற செய்ய வேண்டும். குயில் கூவும் ஓசை தம் செவியில் பாய்ந்து களிப்பை தர வேண்டும்.

முடிவுரை

எனவே பாரதியாரின் கனவு இல்லம் வித்தியாசமானது

Answered by paulprabhu725
3

Answer:

a arama pani Answer amuhuodo

Similar questions