10 mol hitrogen nai kondu ethanai mol neer uruvagum ??
Answers
நீரியம் அல்லது ஐதரசன் (Hydrogen, ஹைட்ரஜன்) என்பது H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். இதை நீரியம், நீரகம், ஐதரோசெனியம் என்று பல பெயர்களால் அழைக்கிறார்கள். இத்தனிமத்தின் அணு எண் 1, அணு எடை 1.008. தனிமவரிசை அட்டவணையில் இடம் பெற்றுள்ள தனிமங்களில் மிகவும் இலேசான தனிமமாகக் கருதப்படுவது ஐதரசனாகும். பிரபஞ்சத்தில் அதிக அளவிலுள்ள ஒற்றை அணு தனிமம் ஐதரசனேயாகும். அண்டத்தில் மொத்த அணுக்கூறு நிறையில் 75% ஐதரசனாகிய ஒற்றையணு நிரம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது [7]. சில விண்மீன்கள் பெருவாரியாக பிளாசுமா நிலை ஐதரசன் நிரம்பிய விண்மீன்களாகக் கருதப்படுகின்றன. 1H என்ற குறியீட்டால் குறிக்கப்படும் புரோட்டியம் என்ற ஐசோடோப்பு பெரும்பாலாகக் காணப்படும் ஐதரசனின் ஓரிடத்தான் (ஐசோடோப்பு) ஆகும். இதன் உட்கருவில் நொதுமி அல்லது நியூட்ரான் என்பது எதுவும் இல்லாமல் ஒரு நேர்மின்னி (புரோட்டான்) மட்டுமே இருக்கும்.
ஐதரசனானது, சீர்நிலை வெப்ப அழுத்தத்தில், நிறமற்ற, சுவையற்ற, மணமற்ற, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய வளிமம் ஆகும். இத்தனிமம் மாழையல்லா (உலோகமற்ற) வகையைச் சேர்ந்தது. இது ஒற்றை இயைனியப் (univalent) பண்பும், இரண்டு நீரிய அணுக்கள் இணைந்து, ஈரணு (H2) வடிவு கொள்ளும் பண்பும் கொண்ட தனிமம் ஆகும்.
நீரியம், இந்த அண்டத்தில் கிடைக்கும் வேதித்தனிமங்கள் யாவற்றிலும் எடை குறைவானதும், கூடிய அளவு கிடைக்கக்கூடியதும் ஆகும். பூமியில் எரிமலை உமிழ் வளிமங்களிலும்,பாறை உப்புப் படிவங்களிலும் நீரியம் தனித்துக் காணப்படுகிறது. புவி வளிமண்டலத்தில் மில்லியனில் 0.5 பங்கு என்ற அளவில் செழுமை பெற்றுள்ளது. ஆர்கான், நியான்,ஈலியம், கிரிப்டான் போன்ற மந்த வளிமங்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. பூமியின் மேலோட்டுப் பகுதியில் 1 விழுக்காடும் நீர்மண்டலத்தில் 10.82 விழுக்காடும் நீரியம் சேர்ந்துள்ளது. அண்டத்தின் 75% தனிமத் திணிவு நீரியத்தாலானது.[8] அதாவது, அண்டப் பெருவெளியில், நாள்மீன்கள் போன்ற யாவும் உள்ளடக்கிய பேரண்டத்தில் உள்ள பொருள்களில் 75% ஐதரசன் தான் இருப்பதாகக் கணித்துள்ளார்கள்.[9] இது நீர், அனைத்து உயிரகச் (organic) சேர்மங்கள், (கூண்டு மூலக்கூறுகளாகிய பக்மினிசிட்டர் புல்லரீன் (buckminsterfullerene) போன்ற விதிவிலக்குகள் தவிர்த்து) மற்றும் அனைத்து உயிரினங்களிலும் இடம் பெற்றுள்ளது. விலங்கினங்கள், தாவரங்களில் நீர் முக்கிய மூலப்பொருளாக இருப்பதால், ஐதரசனின் சேர்மானம் இல்லாத உயிரினமே இல்லை எனலாம். கார்பனுடன் சேர்ந்து எண்ணிலா கரிம வேதிப்பொருட்களை ஐதரசன் தந்துள்ளது.
இது வேதியியல் வினைவழி பெரும்பாலான பிற தனிமங்களுடன் வினையாற்றவல்லது. ஐதரசன் அம்மோனியா உண்டாக்காகவும், எடை குறைவானதால் காற்றில் மேலுந்தும் வளிமமாகவும், தானுந்து போன்ற ஊர்திகளுக்கு மாற்று எரிபொருளாகவும், எரிபொருள் கலன்களுக்கான வளிமமாகவும் பயன்படுகின்றது.
pls mark me the brainliest