கூற்று: 1770இல் இங்கிலாந்து தேயிலையைத்
தவிர ஏனைய பொருட்களின் மீதான வரிகளை
ரத்து செய்தது.
காரணம்: காலனி நாடுகளின் மீது நேரடியாகவோ
அல்லது மறைமுகமாகவோ வரிவிதிக்கும்
உரிமை ஆங்கிலேய பாராளுமன்றத்திற்கு
உண்டு என்பதை உறுதிப்படுத்தவே
தேயிலையின் மீதான வரி தக்கவைத்துக்
கொள்ளப்பட்டது.
(அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால்
காரணம் கூற்றை விளக்கவில்லை.
(இ) கூற்று சரி. காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு. காரணம் சரி.
Answers
Answered by
0
Answer:
plz ask either in english or in hindi....!!!
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.
- 1770 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரான நார்த் பிரபு தேயிலையின் மீதான வரியினைத் தவிர ஏனைய பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்தார்.
- காலனி நாடுகளின் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரி விதிக்கும் உரிமை ஆங்கிலேய பாராளுமன்றத்திற்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தவே தேயிலையின் மீதான வரி தக்க வைத்துக் கொள்ளப்பட்டது.
- அமெரிக்க நாட்டினர் பாஸ்டன் நகரின் வீதிகளில் ஆங்கிலப் படைகள் அணி வகுத்துச் சென்ற போது ஆங்கிலேயரை விமர்சனம் செய்தனர்.
- இதனால் கோபம் கொண்ட ஆங்கிலப் படைகள் அமெரிக்க மக்களுக்கு எதிராக துப்பாக்கிச் சுடு நடத்தினர்.
Similar questions