Math, asked by jrjegan007, 7 months ago

180 செமீ சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பளவைக் காண்க.​

Answers

Answered by ParkaviSelvakumar
1

Step-by-step explanation:

1.

ஒரு முக்கோண வடிவ வயலின் பக்க நீளங்கள் முறையே 28 மீ, 15 மீ எனில் வயலின் பரப்பளவைக் கணக்கீடுக. மேலும் வயலைச் சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு Rs. 20 செலவாகும் எனில், வயலைச் சமப்படுத்த ஆகும் மொத்தச் செலவைக் கணக்கீடுக.

2.

ஒரு முக்கோண வடிவ நிலத்தின் பக்கங்கள் முறையே 22 மீ,120 மீ, மற்றும் 122 மீ எனில் வயலின் பரப்பளவைக் கணக்கீடுக. மேலும் வயலைச் சமப்படுத்த ஒரு சதுர மீட்டருக்கு Rs.20 செலவாகும் எனில், வயலைச் சமப்படுத்த ஆகும் மொத்தச் செலவைக் கணக்கிடுக.

3.

180 செமீ சுற்றளவு கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பளவைக் காண்க.

4.

ஒரு முக்கோணம் மற்றும் இணைகரமானது சமமான பரப்பைக் கொண்டுள்ளன. அந்த முக்கோணத்தின் பக்கங்கள் முறையே 48 செ.மீ மற்றும் 52 செமீ ஆகும். மேலும் இணைகரத்தின் அடிப்பக்கம் 20 செ.மீ எனில் (i) ஹெரான் சூத்திரத்தைப் பயன்படுத்தி முக்கோணத்தின் பரப்பு, (ii) இணைகரத்தின் உயரம் ஆகியவற்றைக் காண்க.

5.

AB = 13 செமீ, BC = 12 செமீ, CD = 9 செமீ, AD = 14 செமீ ஆகியவற்றைப் பக்கங்களாகவும் BD = 15 செமீ ஐ மூலைவிட்டமாகவும் கொண்ட நாற்கரம் ABCD இன் பரப்பைக் காண்க.

6.

ஒரு பூங்காவனது நாற்கர வடிவிலுள்ளது. அந்தப் பூங்காவின் பக்க அளவுகள் முறையே 15 மீ, 20 மீ, 26 மீ மற்றும் 17 மீ மற்றும்முதல் இரண்டு பக்கங்களுக்கு இடையேயுள்ள கோணம் செங்கோணம் எனில் பூங்காவின் பரப்பைக் காண்க.

7.

ஒரு சரிவாக்கத்தின் இணைப்பக்கங்களின் நீளங்கள் 15 மீ, 10 மீ மற்றும் அதன் இணையற்ற பக்கங்களின் நீளங்கள் 8 மீ, 7 மீ எனில் அந்தச் சரிவாக்கத்தின் பரப்பைக் காண்க.

8.

ஒரு கனச்செவ்வக வடிவப் பெட்டியின் அளவுகளானது 6 மீ× 400 செ மீ × 1.5 மீ ஆகும். அப்பெட் டியின் வெ ளிப்புறம் முழுவதும் வண்ணம் பூசுவதற்கு 1 சதுர மீட்டருக்கு Rs.22 வீதம் ஆகும் எனில், மொத்தச் செலவைக் காண்க.

9.

(i) ஒரு கனச்சதுரத்தின் மொத்த ப்பரப்பு 2400 செ மீ2 எனில், அதன் பக்கப்பரப்பைக் காண்க.

(ii) ஒரு கனச்சதுரத்தின் ஒரு முகத்தின் சுற்றளவு 36 செ மீ எனில், அதன் மொத்த ப்பரப்பைக் காண்க.

10.

4 செமீ பக்க அளவு உடைய ஒரே மாதிரியான மூன்று கனச்சதுரங்கள் ஒன்றோடு ஒன்று பக்கவாட்டில் இணைக்கப்படும் போது கிடைக்கும் புதிய கனச்செவ்வகத்தின் மொத்தப் பரப்பு மற்றும் பக்கப் பரப்பு ஆகியவற்றைக் காண்க

11.

ஒரு தீப்பெட்டியின் அளவுகள் 6 செ மீ × 3.5 செ மீ × 2.5 செ மீ என உள்ளது. இதே அளவுகளைக் கொண்ட 12 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு கட்டின் கனஅளவைக் காண்க.

12.

ஒரு சாக்லேட் பெட் டியின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 5:4:3 என்ற விகிதத்தில் உள்ளது. அதன் கன அளவு 7500 செ மீ3 எனில் அதன் பக்க அளவுகளைக் காண்க.

13.

ஒரு செங்கலின் அளவுகள் 24 செ மீ× 12 செ மீ × 8 செ மீ ஆகும். 20 மீ நீளம், 48 செ மீ அகலம் மற்றும் 6 மீ உயரமுள்ள ஒரு சுவர் எழுப்புவதற்கு இது போன்ற எத்தனை செங்கற்கள் தேவை ?

14.

ஒரு கொள்கலனின் (container) கன அளவு 1440 மீ3. அதன் நீளம் மற்றும் அகலம் முறையே 15 மீ மற்றும் 8 மீ எனில் அதன் உயரத்தைக் காண்க

15.

ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு 726 செமீ2 எனில் அதன் கன அளவைக் காண்க

16.

ஒரு கனச்சதுர வடிவிலான பால் தொட்டியானது 1,25,000 லிட்டர் கொள்ளவைக் கொண்டுள்ளது. அத்தொட்டியின் பக்க நீளத்தை மீட்டரில் காண்க.

17.

15 செ மீ பக்க அளவுள்ள ஓர் உலோகத்தால் ஆன கனச்சதுரமானது உருக்கப்பட்டு ஒரு கனச்செவ்வகமாக உருவாக்கப்படுகிறது. கனச்செவ்வகத்தின் நீளம் மற்றும் உயரம் முறையே 25 செ மீ மற்றும் 9 செ மீ எனில் அதன் அகலத்தைக் காண்க

18.

ஒரு நீர்த் தொட்டியின் அளவுகள் 12 மீ × 10 மீ × 8 மீ என உள்ள து. அந்தத்தொட்டியில் நீரானது 5 மீ வரை நிரம்பியிருக்கிறது எனில் அந்தத் தொட்டியை முழுவதுமாக நிரப்புவதற்கு மேலும் எவ்வளவு நீர் தேவை?

19.

ஒரு மூடிய கனச் செவ்வக மரப் பெட்டியின் வெளிப்புற அளவுகள் 30 செமீ × 25 செமீ × 20 செமீ ஆகும். அந்தப் பெட்டியைச் சுற்றிலும் உள்ள மரத்தின் தடிமன் 2 செமீ எனில் அந்தப் பெட்டியைச் செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ள மரத்தின் கனஅளவைக் காண்க.

20.

10 செமீ பக்க அளவுள்ள கனச்சதுரத்தின் கனஅளவைக் காண்க.

10 x 3 = 30

21.

ஒரு கனச்செவ்வகத்தின் நீளம் 7.5 மீ, அகலம் 3 மீ, உயரம் 5 மீ எனில் அதன் மொத்தப் பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க.

22.

ஓர் அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 25 மீ, 15 மீ மற்றும் 5 மீ ஆகும்.அறையின் தரை மற்றும் நான்கு சுவர்களையும் புதுப்பிக்க 1 சதுர மீட்டருக்கு Rs. 80 வீதம் ஆகும் எனில், மொத்த செலவைக் காண்க.

23.

5 செ.மீ பக்க அளவு கொண்ட கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பைக் காண்க.

24.

ஒரு கனச்சதுரத்தின் மொத்தப்பரப்பு 486 செ.மீ2 எனில் அதன் பக்கப் பரப்பைக் காண்க.

25.

7 செமீ பக்க அளவுள்ள ஒரே மாதிரியான இரண்டு கனச்சதுரங்கள் ஒன்றுடன் ஒன்று பக்கவாட்டில் இணைக்கப்படும்பொது கிடைக்கும் புதிய கனச்செவ்வகத்தின் மொத்தப்பரப்பு மற்றும் பக்கப்பரப்பு ஆகியவற்றைக் காண்க.

26.

ஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 120 மிமீ, 10 செமீ மற்றும் 8 செமீ. இதே அளவுகள் கொண்ட 10 கனச்செல்வங்களின் கன அளவைக் காண்க.

27.

ஒரு கனச்செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரத்தின் விகிதம் 7:5:2 என்க. அதன் கனஅளவு 3580 செமீ3 எனில் அதன் பக்க அளவுகளைக் காண்க.

28.

ஒரு மீன் தொட்டியானது 3.8 மீ × 2.5 மீ × 1.6 மீ என்ற அளவுகளை உடையது. இந்தத் தொட்டியானது எத்தனை லிட்டர் தண்ணீர் கொள்ளும்?

29.

ஒரு கனச்சசதுரத்தின் மொத்தப்பரப்பு 864 செமீ2 எனில் அதன் கன அளவைக் காண்க.

30.

ஒரு கனச்சதுர வடிவ நீர்த் தொட்டியானது 64,000 லிட்டர் நீர் கொள்ளும் எனில், அந்தத் தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்க.

Similar questions