1908இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை
வேலை நிறுத்தம் பற்றி நீவீர் அறிவது யாது?
Answers
Answered by
0
1908இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் :
- கோரலில் உள்ள பருத்தி நூற்பாலையில் தொழிலாளர்கள் மோசமான வேலை, வாழ்க்கை சூழலினால் பாதிக்கப்பட்டனர்.
- இதனை அறிந்த வ.உ.சி மற்றும் சிவா ஆகியோர் கோரல் நூற்பாலை தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
- இதன் அடிப்படையில் 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கோரல் நூற்பாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- இது நாடு முழுவதும் கவனத்தினை ஈர்த்தது. தேசிய செய்திப் பத்திரிக்கைகள் இந்த போராட்டத்திற்கு பாராட்டுகளையும், தங்களின் ஆதரவையும் தந்தனர்.
- ஆனால் கோரல் பருத்தி நூற்பாலை முதலாளிகள் தங்கள் முடிவில் மாற்றம் இல்லாமல் இருந்தனர்.
- இதனால் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது. இதன் விளைவாக நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் முதலாளிகள் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றுவதாக கூறினார்.
Similar questions