கூற்று: காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939 ஆம் ஆண்டு பதவி விலகின காரணம்: காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு ப�ோரில் பங்கேற்றது. அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை. ஆ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது இ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறானது. ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
- 1939 இல் நடந்த இரண்டாம் உலகப்போரில் காங்கிரஸ் அமைச்சரவைகளை கலந்து ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு ஈடுபட்டது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் அமைச்சரவைகள் தங்களின் பதவியினை இராஜினாமா செய்தன.
- 1934 ஆம் ஆண்டு லண்டனில் முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை உறுதியாக வலியுறுத்திவிட்டு இந்தியா வந்த முகமது அலி ஜின்னா முஸ்லிம் லீக்கிற்கு புத்துணர்ச்சியினை அளித்தார்.
- முகமது அலி ஜின்னா காங்கிரஸ் அமைச்சரவைகள் தங்களின் பதவியினை இராஜினாமா செய்த நாளை மீட்பு நாள் என அறிவித்தார்.
- இந்துக்களிடம் முஸ்லிம்கள் தங்களது அனைத்து அரசியல் அதிகாரங்களையும் இழந்து விடுவர் என கூறிய ஜின்னா 1940 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என வலியுறுத்தினார்.
Similar questions