India Languages, asked by StarTbia, 1 year ago

2. கண்ணகிக்கும் பாண்டியமன்னன் நெடுஞ்செழியனுக்கும் நடந்த சொற்போரினை உரையாடலாக எழுதுக.
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 38 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
2

விடை :

 

மன்னன்   : கண்ணீர்ப்பெருக்குடன் என் முன் வந்து நிற்கும் பெண்ணே! நீ யார்?

கண்ணகி : ஆராயாத மன்னனே! நான் சொல்வது ஒன்று உண்டு, கேள். தன் உடல் தசையை அரிந்து, துலாத்தட்டில்  வைத்து, ஒரு புறா உற்ற துயரத்தைத் தீர்த்தான், சிபி என்னும் மன்னவன். ஒரு பசுவின் துயருக்காக, ஒப்பற்ற மகனையே தேர்ச் சக்கரத்திலிட்டு, அந்த வாயில்லா ஜீவனுக்கு  நீதி வழங்கினான் மனுநீதிச் சோழன். இத்தகையோர் ஆட்சிபுரிந்த காவிரிப்பூம்பட்டினம் என் ஊர். அவ்வூரில் புகழ்மிக்க பெருங்குடியில் தோன்றிய மாசாத்துவான் என்பவன் மகன் கோவலன். அவன், என் சிலம்பை விற்று, பொருள் ஈட்டும் விதமாய், இம்மதுரை மாநகர் வந்தான்; கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டு உன்னால் கொலையுண்டான்; அவன் மனைவி நான். கண்ணகி என்பது என் பெயர்.

மன்னன் : பெண்ணே! கள்வனைக் கொல்லுதல் குற்றம் ஆகாது; அரச நீதியே ஆகும்.

கண்ணகி: நன்னெறி  ஆராயாத மன்னனே! என் கால் சிலம்பின் பரல்கள் மாணிக்கங்கள் ஆகும்.

மன்னன் : நன்று. எம்முடைய சிலம்பின் பரல்கள் முத்துகள் ஆகும். (இவ்வாறு கூறிவிட்டு, அவன் கட்டளையிட, கோவலனிடமிருந்து கவரப்பட்ட சிலம்பு அவன் முன் கொண்டுவந்து வைக்கப்பட்டது. கண்ணகி அந்தச் சிலம்பை எடுத்து உடைத்தாள். அப்போது அதனின்றும் சிதறிய மாணிக்கப்பரல்களுள் ஒன்று மன்னன் உதட்டில் பட்டுத் தரையில் விழுந்தது. (அதனைக் கண்ட மன்னன்)

மன்னன் : அந்தோ! என் குடை தாழ்ந்தது; செங்கோல் தளர்ந்தது; வழிவழியாய் வரும் பாண்டிய மன்னர்களின் செங்கோல் ஆட்சி இன்று என்னால் தவறிவிட்டது. பொற்கொல்லன் ஒருவன் சொல்லைக் கேட்டு நீதி தவறிய யானோ அரசன்? யானே கள்வன்! என் ஆயுள் கெடுவதாக என்று கூறி, மன்னவன் அரியணையிலிருந்து மயங்கி விழுந்து உயிர் நீத்தான்.

Similar questions