India Languages, asked by StarTbia, 1 year ago

2. கங்கையின் மறுகரை அடைந்த குகனிடம் இராமன் கூறியவற்றை தொகுத்தெழுதுக.
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 67 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
3
கங்கையின் மறுகரை அடைந்த குகனிடம் இராமன் கூறியவை பின்வருமாறு:

குகனும் தன்னுடன் வருவதாக கூறியதை கேட்ட குற்றமற்றவனாகிய இராமன், என் உயிர் போன்றவன் நீ; என் தம்பி இலக்குவன் உனக்கும் தம்பியாவான்; நல்ல நெற்றியை உடைய சீதை உன் கொழுந்தி; நீர் சூழ்ந்த இந்நிலவுலகம் முழுவதும் உன்னுடையது. நான் உனது ஆளுகைக்கு உரியவன் என்று கூறினார்.



மேலும், துன்பம் வருமாயின் அதனையடுத்து இன்பமும் தோன்றுவது இயற்கை. இப்பிரிவு தற்காலிகமானதே, அதனை நினைத்து வருந்த வேண்டாமென்றும்,  முன்னர் இராம, இலக்குமண , பரத, சத்ருக்கன் என நாங்கள் உடன்பிறந்தோர் நால்வராய் இருந்தோம். உன்னுடைய எல்லையில்லா அன்பினால் இனி உன்னோடு சேர்ந்து ஐவரானோம் என்று கூறி குகனை தன்னுடைய சகோதரனாக ஏற்றுக் கொண்டார்.





Similar questions