India Languages, asked by StarTbia, 1 year ago

1. குகனுக்கும் இராமனுக்கும் நடைபெற்ற உரையாடலைத் தொகுத்தெழுதுக
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter10 கம்பராமாயணம்-
Page Number 67 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
5

குகனுக்கும் இராமனுக்கும் நடைபெற்ற உரையாடல் பின்வருமாறு:


குகன்: எல்லா உயிர்களுக்கும் தலைவனே! உலகின் அனைத்து செல்வத்திற்கும்  முதல்வனே தங்களுக்கு தொண்டு செய்ய வந்துள்ளேன்.


இராமன்: இங்கு அமர்க.

குகன்: தங்களுக்காக, நன்கு பதப்படுத்தப்பட்ட தேனும் மீனும் கொண்டு வந்துள்ளேன்.

இராமன்: (விருத்த மாதவரை நோக்கி), குகன் கொண்டு வந்த தேனும் மீனும் கிடைப்பதற்கு அரியன. அவை அமுதத்தை விட சிறந்தவையாகும். உண்மையான அன்பும், பரிவும்  கலந்திருப்பதால் தூய்மையானவை. நாங்கள் உண்டதற்கு  சமம்.


குகன்: (இராமரை மரஉரி கோலத்தில் கண்டு, மனம் வருந்தி) இத்துயரோடு, என் இருப்பிடம் செல்ல துணியேன். ஐயனே, தங்களுக்கு வேண்டிய தொண்டு செய்வேன்"

இராமன்: எல்லாவற்றிலும் இனிய நண்பனே! இவ்விடத்தில் எம்மோடு இருப்பாயாக!  




Similar questions