2. அன்றாட வாழ்வில் பயன்படும் சட்டங்கள் குறித்துக் கட்டூரை எழுதுக.
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter12 அன்றாட வாழ்வில் சட்டம்-
Page Number 78 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
21
விடை:
அன்றாட வாழ்வில் பயன்படும் சட்டங்கள்
முன்னுரை :
ஒவ்வொருவரும் தமது விருப்பத்திற்கேற்ப வாழ உரிமையுண்டு என்றாலும் இன்னொருவரின் உரிமையில் தலையிடுவதும் இன்னொருவரின் உரிமையை மறுப்பதும் குற்றமாகும். மக்கள் அனைவரும் தங்களுக்குள் சச்சரவின்றி வாழ அரசாங்கம் அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களை இயற்றியுள்ளது. அவற்றை விரிவாக பார்ப்போம்.
சமயச் சார்புச் சட்டம் :
நம் நாடு ஒரு சமயச் சார்பற்ற நாடு. எனினும் ஒவ்வொருவரும் தான் விரும்பும் சமய வழிபாட்டினை செய்துகொள்ளவும், பிறருடைய சமய வழிபாட்டில் தலையிடுவதையும் இச்சட்டம் தடுக்கிறது. அதனால் இந்துக்களுக்கு இந்து சமயச் சட்டமும், இசுலாமியருக்கு இசுலாமியச் சட்டமும், கிறித்தவருக்கான சட்டமும் உள்ளன.
போக்குவரத்துச் சட்டங்கள் :
பொதுமக்களின் நலன் கருதியே சாலைவிதிகள் செயல்படுத்தப் படுகின்றன. வண்டியோட்டிகள் எச்சரிக்கையாய் நடந்துகொண்டால் தீங்கு நேராது. சில இடங்களுக்குப் போகவும் வரவும் எனத் தனித்தனிப் பாதைகள் உள்ளன. அவற்றை உரிய அறிவிப்புப் பலகைகள் வாயிலாய் அறிந்து முறையாய் நடந்து கொள்ள வேண்டும். குறிப்பிட்ட பாதைகளில் குறிப்பிட்ட வேகத்தில் சென்றால் துன்பம் எதுவும் நேரிடாது. இத்தகைய சாலை விதிகளை மீறிச் செயல்படும் போது , அது குற்றமாய்க் கருதப்படுகிறது.
பொது இடங்களில் புகைப்பிடித்தலுக்கு தடை :
பொது இடங்களில் புகைப்பிடித்தல், புகையிலை போட்டுத் துப்புதல் போன்ற பிறருக்கும் தமக்கும் தீமைகளைத் தருகின்ற பல நிகழ்வுகளைத் தடுக்க இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மாணாக்கரின் வன்கொடுமை தடுப்புச் சட்டம் :
புதிய மாணவர்கள் மூத்த மாணாக்கர்களுடன் இயல்பாக கலந்து பழக தயங்குவதை களைய, மூத்த மாணாக்கர்கலே தானாகவே வலிய சென்று, புதிய மாணவர்களுடன் பழகும் பழக்கம் இருந்துவருகிறது. ஆனால் இன்று அது வரம்பு மீறி வன்கொடுமையாக மாறிவிட்டது. இதனை இச்சட்டம் தடுக்கிறது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் :
முடிவுரை :
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடாது நற்பண்புடன் வாழ்வதற்காக இயற்றப்பட்டுள்ளன. அவற்றை நாம் தவறாமல் பின்பற்ற வேண்டும். இச்சட்டங்களை மீறுபவர்களை காவல்துறையிடம் முறையிட்டு குற்றங்களைத் தடுக்க உதவ வேண்டும். ‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ என்று திருக்குறள் கூறுவதனை எண்ணிப்பார்த்து சட்டங்களை மதிப்போம்; குற்றம் களைந்த வாழ்க்கை வாழ்வோம். சட்டம் நம்மை காக்கும்.
Answered by
5
விடை:
சீர்மோனை : யா னோ, யா னே
விளக்கம்:
ஓர் அடியில் சொற்கள் (சீர்கள்) தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவதை வழிமோனை (அ) சீர்மோனை என்று கூறுவார் . மோனை அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வருமாறும் அமைதல் உண்டு.
மேலே கூறிய " யானோ அரசன் யானோ கள்வன்" வாக்கியத்தில், யானோ, யானே என்ற சொற்களில் "யா" என்ற முதல் எழுத்து சீர்தோறும் ஒத்து வருகிறது.
மேலும் சில எடுத்துக்காட்டுக்கள்:
1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
2. மலையிலே மழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது
சீர்மோனை : யா னோ, யா னே
விளக்கம்:
ஓர் அடியில் சொற்கள் (சீர்கள்) தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவதை வழிமோனை (அ) சீர்மோனை என்று கூறுவார் . மோனை அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வருமாறும் அமைதல் உண்டு.
மேலே கூறிய " யானோ அரசன் யானோ கள்வன்" வாக்கியத்தில், யானோ, யானே என்ற சொற்களில் "யா" என்ற முதல் எழுத்து சீர்தோறும் ஒத்து வருகிறது.
மேலும் சில எடுத்துக்காட்டுக்கள்:
1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக
2. மலையிலே மழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது
Similar questions
English,
8 months ago
Social Sciences,
8 months ago
Accountancy,
8 months ago
India Languages,
1 year ago
Science,
1 year ago
Sociology,
1 year ago
Math,
1 year ago