India Languages, asked by StarTbia, 1 year ago

2. காலமறிதலை வள்ளுவர் வழி நின்று எழுதுக.
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


காலம் அறிதலின் சிறப்பு:


ஆந்தையின் பார்வைத் திறன் பகலில் குறைவு என்பதால், தன்னிலும் வலிய ஆந்தையை  காக்கை பகலில் வெல்லும். அதனைப் போலத் தன்னை விட வலிய பகைவரைக் காலம் அறிந்து வெல்லுதல் வேண்டும்.


காலத்தில் செய்யும் செயலின் பலன் :


காலத்தோடு பொருந்திய செயலை மேற்கொள்வதே செல்வம் நம்மைவிட்டு நீங்காமல் பிணைத்து வைக்கும் கயிறாகும். ஒரு செயலைச் செய்வதற்கரிய கருவிகளுடன் உரிய காலத்தையும் அறிந்து செய்தால் செய்தற்கு அரிய செயல் என்று எதுவும் இல்லை. எல்லா செயல்களும் எளிதில் முடியும். ஒருவன் தக்க காலமும் இடமும் அறிந்து செயல்படுவானாயின் அவன் இவ்வுலகத்தையே ஆளக் கருதினாலும் அது கைகூடும்.


காலம் வரும் வரை காத்திருத்தலின் அவசியம் :


உலகம் முழுவதையும் வெல்ல கருதுபவர், தம் வலிமையினும் ஏற்ற காலத்தையே எதிர்பார்த்திருப்பார். போர் செய்யும் ஆட்டுக்கிடாய் பின்வாங்குவது போன்றது, பகைவனை வெல்லத் தக்க காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும்.


காத்திருக்கும்போதும் பகையினை வெளிப்படுத்தற்க. அறிவுடையோர் தம் பகைவரை வெல்வதற்கேற்ற காலம் வரும்வரை தம் மனத்திலே கோபத்தைக் மறைத்துவைக்க வேண்டும். பகைவரை அழிப்பதற்கு ஏற்ற காலம் வாய்க்கும்வரை அவரைக் காணும்போது பணிவுடன் இருக்க வேண்டும்; ஏற்ற காலம் வாய்த்ததும் அவரை அழிக்க வேண்டும்.


காலம் வரும் போது விரைந்து செயல்படுதல் :


ஏற்ற காலம் வாய்த்த போது செய்தற்கு அரிய செயல்களையெல்லாம் அப்பொழுதே செய்து முடித்தல் வேண்டும். இரையை எதிர்பார்த்திருக்கும் கொக்கினைப் போல் காத்திருந்து, அது தக்க இரையைக் கண்டவுடன் செயல்படுவது போல விரைந்து செயல்பட்டுச் செயலை முடிக்க வேண்டும்.

Similar questions