1. ஒழுக்கமுடைமைபற்றி வள்ளுவர் கூறும் கருத்துக்களைத் தொகுத்தெழுதுக
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
ஒழுக்கமுடைமை பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகள்
ஒழுக்கத்தின் தனிச் சிறப்புக்கள் :
ஒருவருக்கு உயர்வினைத் தருவது நல்லொழுக்கமே.
ஒருவன் வெறுமனே உயிர் வாழ்வதால் சிறப்பு ஏற்படாது. நல்லொழுக்க நெறியில் வாழ்வதன் மூலம் உண்டாகும் சிறப்பே அவன் வாழ்வதற்கு ஓர் அர்த்தத்தை உண்டாக்குவதால் அவ்வொழுக்கம் உயிரினும் மேலானதாகப் போற்றப்படவேண்டும்.
எவ்வகையில் பாரத்தாலும் ஒழுக்கமே நல்ல துணையாகும். ஆதலால், அவ்வொழுக்கத்தை காப்பது கடினமானாலும் எப்பாடுபட்டாவது விரும்பியும் வருந்தியும் காக்க வேண்டும்.
மானிடப் பண்பு :
ஒழுக்கமுள்ளவரே உயர்குடியினர் ஆவர்; அவ்வொழுக்கம் தவறியவர் எவ்வளவு உயர்ந்தவராயினும் தாழ்ந்த குடியினராக கருதப்படுவர். அந்தணன் தான் கற்ற வேதத்தினை மறந்துவிட்டாலும் மீண்டும் ஓதிக் கற்றுக்கொள்ள இயலும். ஆனால், ஒருவர் ஒழுக்கத்தினின்றும் வழுவினால் அவருடைய நற்குடிப்பிறப்பின் சிறப்பு கெட்டு விடும். பொறாமை உடையவனிடத்தில் செல்வம் நிலைபெற்றிராது. அதுபோல, ஒழுக்கம் கெட்டவனிடத்தில் உயர் பெருமை நில்லாது. மனவலிமையுடையார், ஒழுக்கம் தவறுவதால் உண்டாகும் குற்றத்தினையும் இழிவையும் அறிந்து, ஒழுக்கத்தினின்றும் சிறிதும் பிறழமாட்டார்கள். நல்லொழுக்கத்தில் நின்ற சான்றோர், மறந்தும் பிறர்க்குத் தீமை விளைவிக்கின்ற சொற்களைக் கூறார்.
ஒழுக்கத்தின் விளைவுகள் :
நல்லொழுக்கத்தாலே எல்லோரும் மேன்மையடைவர். ஒழுக்கம் தவறுவதால் தாம் அடையக் கூடாத பெரும்பழியையும் அடைவர். நன்மை என்னும் விளைவைப் பெற ஒருவருக்கு ஒழுக்கமே விதையாகும். தீய ஒழுக்கம் என்றும் துன்பத்தையே தரும். நல்லொழுக்கத்தில் நின்ற சான்றோர், மறந்தும் பிறர்க்குத் தீமை விளைவிக்கின்ற சொற்களைக் கூறார். கற்றவராயினும், உலகில் வாழும் நன்மக்களின் வாழ்க்கையோடு பொருந்தி வாழ அறியாதவர் அறிவில்லாதவரே ஆவார்.