2. சான்றோர் யாருடன் சேர்வார்?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter14 புறநானூறு-
Page Number 89 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
பொன்னும் பவளமும் முத்தும் மணியும் தோன்றுமிடம் வெவ்வேறாக இருந்தாலும் மதிப்பு மிக்க மாலையாக ஒன்று சேறுகிறது. அதுபோல சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே சேர்வர்.
விளக்கம்:
பொன்னும் பவளமும் முத்தும் மணியும் நிலைத்த பெருமலையில் பிறக்கும் மாணிக்கமும் தோன்றும் இடங்களால் ஒன்றுக்கொன்று தொலைவில் இருப்பினும், மாலையாகக் கோத்து மதிப்பு மிக்க அணிகலனாக அமைக்கும் போது, தம்முள் ஒருங்கு சேரும். அதுபோல சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே சேர்வர். சான்றாண்மை இல்லாதவர் தீயவர் பக்கமே சேர்வர்.
இந்த பாடலின் ஆசிரியர் கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்களுள் ஒருவர்.
Similar questions