India Languages, asked by StarTbia, 1 year ago

2. சிலப்பதிகாரம் எவ்வாறெல்லாம் போற்றப்படுகிறது?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 38 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
3

விடை :

 

சிலப்பதிகாரம் முதற்காப்பியம், இரட்டைக்காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் எனப் போற்றப்படுகிறது.


விளக்கம்:


1.    ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையானதால் முதற்காப்பியம் என்றும்,

2.    சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையை இரட்டைக் காப்பியங்கள் என்றும்,

3.    இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழை கொண்டிருந்ததால்  முத்தமிழ்க் காப்பியம் என்றும்,

4.    சாதாரண குடியானவர் அரச குலத்திற்கே பாடம் கற்பிக்க முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியதால் குடிமக்கள் காப்பியம் என்றும்,

5.    சிலப்பதிகாரம் சமணச் சார்புடையதாக இருந்தாலும், சைவ, வைணவக் கருத்துகளை போற்றியதால் அது ஒற்றுமை காவியம் எனவும்,

6.    இசை நாடகமே சிலப்பதிகார கதையின் உருவம் என்பதால் நாடகக் காப்பியம் எனவும் போற்றப்படுகிறது.


Similar questions