20. இயக்குநரின் மாதிரி ஆண்டறிக்கையை தயார் செய்க.
Answers
Answer:
Search....
பள்ளி ஆண்டு விழா
0
Like
0
I tried it
0
Post a comment
பள்ளி என்பது குழந்தைகளுக்குப் பாடம் மட்டும் போதிப்பதாக இருக்கக்கூடாது. குழந்தைகளின் தனிப்பட்ட திறன்களை வெளிக்கொணர்வதே பள்ளிக் கூடத்தின் செயல்பாடாக இருக்க வேண்டும். குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டி அவர்கள் முன்னேற தன்னை உலகிற்கு வெளிப்படுத்த அத்துனை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருவதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் பள்ளிகளில் பல விழாக்ககள் கொண்டாடப்படுகிறது. அவற்றுள் முக்கியமானது பள்ளி ஆண்டு விழாவாகும்.
கல்வியாண்டில் தாங்கள் செய்த அத்தனை செயல்பாடுகள், முயற்சிகள், சாதனைகள், அனைத்தையும் வெளியுலகிற்கு எடுத்துக் காட்டவும், குழந்தைகளின் உள்ளே உள்ள பிற கலைகள், உதாரணமாக ஆடல், பாடல், பேசுதல், நடித்தல் போன்ற தனித்திறமைகளை வெளிப்படுத்த மேடை தந்து தன்னம்பிக்கையை வளர்ப்பதாகவும் இத்தகைய ஆண்டு விழாக்கள் அமைகின்றன என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
ஆகவே இத்தகைய சிறப்பான ஆண்டு விழாவைப் பள்ளியில் கொண்டாட முடிவெடுத்த ஆசிரியர்களுடன் கலந்துரையாடப்பட்டது. விழாவிற்கு என்னேன்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்? குழந்தைகளைத் தயார் செய்தல் போன்ற பல செயல்பாடுகளைப் பற்றி கலந்துரையாடல்கள் நிகழ்த்தப்பட்டது.
1. விழா ஏப்ரல் முதல் வாரத்திலேயே கொண்டாட வேண்டும்.
2. பள்ளித்துணை ஆய்வாளர் அவர்கள், CEO, DEO மற்றும் MLA திரு பூபதி, சுற்றுச்சூழல் தலைவர் ராமனாதன் போன்றவர்களை அழைக்க வேண்டும்.( ஊர் பெரியவர்கள் உட்பட)
3. குழந்தைகள்அனைவரும் கண்டிப்பாக மேடை ஏற வேண்டும். எதாவது கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுதல் அவசியம்.
4. அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு வழங்குதல்.
5. பள்ளிக்கு லோகோ அமைத்து வெளியிடுதல்
6. சான்றிதல்களை வெளியிடுதல்
7. அழைப்பிதல் அடித்தல்
8. சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவுப்பரிசுகள் மற்றும் சால்வைகள் வழங்குதல்.
9. பள்ளிக்கு எதிரில் மேடை அமைத்தல்.
10. ஒலிப்பெருக்கி வண்ண விளக்குகள், அலங்காரத் தோரனைகள், வாழைமரம் கட்டுதல், நாற்காலிகள் வாங்குதல், போன்ற அனைத்தும் சிறப்பாக இருக்க வேண்டும்.
11. பெற்றோர் மற்றும் பொது மக்களை நேரில் சென்று அழைத்தல்.
12. வரும் விருந்தினர்களுக்கு இனிப்பு, காரம், காபி மற்றும் அனைவருக்கும் குளிர்பானம் முதலியன வழங்குதல்
13. காவல் துறைக்குத் தெரியப்படுத்துதல் (வெளிய மைதானத்தில் விழா ஏற்பாடுகளை செய்வதால் அவர்களுக்கு தெரியபடுத்துதல்.)
எல்லாவற்றிற்கு மேலாகக் குழந்தைகளைத் தயார் செய்தல் அவசியம்.மேலும் மூன்றாம் பருவத்தேர்வுக்காக குழந்தைகளை தயார் செய்தல் அவசியம். ஆடல் பாடலினால் குழந்தைகளின் கல்வித்திறன் மேம்பட வேண்டுமே தவிர மறக்கப்படக் கூடாது என்பதில் முழுக் கவனத்துடன் செயல்பட்டு, நல்ல முறையில் குழந்தைகளை வழிநடத்தல் அவசியம். மேற்கூறிய அனைத்தையும் விவாதித்தபின் பணிகள் பிரித்துத் தரப்பட்டது.
மிக்க ஆர்வத்துடன் காணப்பட்டனர்.முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியது மனதிற்கு பலம்தருவதாக அமைந்தது. President அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு தருவதாக தெரிவித்தார். விழாவிற்கு தேவையான ஒப்பனை மற்றும் அலங்காரம் தொடர்பான செலவுகளையும் அவரே ஏற்பதாக கூறினார். இன்னும் சிலர் தாங்களாகவே இயன்ற உதவிகளை செய்வதாகக் கூறினர். இந்த ஆண்டு பெற்றோர்கள் பெரும்பான்மையானோர் மிகுந்த தன்னார்வத்துடன் முன் வந்து ஒத்துழைப்பு தருவதாக கூறியது எனக்குப் பெரும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியது.