3. குறிப்பு எழுதுக:
1. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
2. தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
நெடுவினாக்கள் / Long answer questions
Chapter12 அன்றாட வாழ்வில் சட்டம்-
Page Number 78 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
விடை:
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் :
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மக்களுக்குப் பல்வேறு வகைகளில் சேவைகளை வழங்குகின்றன. மக்கள் வாங்கும் பொருள்களில் உள்ள குறைபாடுகளை தடுக்க நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் பல உள்ளன. சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்களில் எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும் மாநில அல்லது மாவட்டக் குறைதீர் மன்றங்களையோ அல்லது நுகர்வோர் பாதுகாப்புக் குழுவையோ அணுகித் தீர்வு காணலாம். இதற்கெனத் நுகர்வோர் நீதிமன்றங்கள் உள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் :
நமது நாடு சனநாயக நாடு என்பதால், அரசியல் சாசனத்தின் 19(1)ஆவது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு; மேலும் அதற்குரிய தகவல்களைப் பெறவும் முழு உரிமை உண்டு. தங்கள்மீது எத்தகைய நிர்வாகம் நடத்தப்படுகிறது என்பதை அறியவும், தாங்கள் செலுத்திய வரிப்பணம் எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறியவும் குடிமக்களாகிய நமக்கு முழு உரிமை உள்ளது. இதை முன்னிறுத்தித்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடிமக்கள் தனியாகவோ, ஒர் அமைப்பின் மூலமாகவோ தகவல் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6 இன்படி தகவல் பெறலாம். இச்சட்டம். ரூ 10 கட்டணமாக செலுத்தி, ஒரே விண்ணப்பத்தில் எத்தனை தகவல் வேண்டுமானாலும் பெறலாம்.