எத்தனாலின் 3 இயற்பியல் பண்புகளையும் 2 வேதியியல் பண்புகளையும் தருக
Answers
Answered by
0
Answer:
sorry I didn't understand that language plz write in english and hindi
plz write in english and hindi
Answered by
0
எத்தனாலின் இயற்பியல் பண்புகள்
- எத்தனால் நிறமற்ற, எரி சுவை உடைய, இனிய மணம் உடைய ஒரு நீர்மம் ஆகும்.
- இது எளிதில் ஆவியாகும் தன்மை உடையது.
- எத்தனாலின் அதனை ஒத்த அல்கேன்களை காட்டிலும் அதிகமான கொதி நிலையினை உடையது.
- எத்தனாலின் கொதிநிலை 78 டிகிரி செல்சியஸ் (351K) ஆகும்.
- எத்தனால் நீருடன் அனைத்து விகிதங்களிலும் முழுவதுமாக கலக்கிறது.
வேதிப் பண்புகள்
நீர் நீக்கம்
- அதிக அளவிலான அடர் கந்தக அமிலத்துடன் எத்தனாலினை சேர்த்து 443K அளவிற்கு வெப்பப்படுத்தும் போது மூலக்கூறினுள் நீர் நீக்கம் ஏற்படுகிறது.
- விளை பொருளாக ஈத்தீன் உருவாகிறது.
சோடியத்துடன் வினை
- எத்தனால் சோடியத்துடன் வேதி வினையில் ஈடுபட்டு சோடியம் ஈத்தாக்ஸைடு மற்றும் ஹைட்ரஜன் வாயுவினை தருகிறது.
Similar questions