India Languages, asked by satheshkumarl46, 2 months ago

3.தமிழின் இலக்கிய வளம் கல்விமொழி பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்

-அறிவியல் கருத்துக்கள் -பிற துறைக் கருத்துக்கள் - தமிழுக்குச் செழுமை மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு

செம்மொழித் தமிழுக்கு

வளம் சேர்க்கும்

மொழிபெயர்ப்புக்கலை. என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்க கட்டுரை எழுதுக.​

Answers

Answered by madhu865
19

Explanation:

முன்னுரை :  

                 " ஒரு மொழி வளம் பெறவும்  உலகத்துடன் உறவு கொள்ளவும் மொழிபெயர்ப்பு இன்றியமையாததாகும்.  உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பு  ஒரு காரணமாகும் "  என்கிறார் மு.க.ஜகந்நாத ராஜா .

 தமிழின் இலக்கிய வளம் :

               மொழிபெயர்த்தல் என்ற தொடரைத் தொல்காப்பியர் மரபியலில் (98 ) குறிப்பிட்டுள்ளார் .

சங்க  காலத்திலேயே  தமிழில் மகாபாரதம்  மொழி பெயர்க்கப் பட்டதாகச்  சின்னமனூர்ச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன . இராமாயணம் , மகாபாரதச்   செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்றுள்ளன . பெருங்கதை , சீவகசிந்தாமணி , கம்பராமாயணம் ,  வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்களும் வடமொழி கதைகளை தழுவிப் படைக்கப்பட்டவையே .

கல்வி மொழி :

                    மொழிபெயர்ப்பைக் கல்வி ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும் . பல அறிவுத்துறைகளுக்கும் , தொழில் துறைகளுக்கும் வெளிநாமட்டினரை எதிர்பார்க்காமல்  நாமே நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியும் .

*  மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும் .

*  வேலைவாய்ப்புத் தளத்தை  விரிவாக்க முடியும் .

*  நாடு,  இன , மொழி  எல்லைகள் கடந்து ஓருலகத் தன்மைப் பெற முடியும் .

பிறமொழியில் உள்ள இலக்கிய வளங்கள் :

                   பிற மொழி இலக்கியங்களை அறிந்துகொள்ள , உருவாக்க மொழிபெயர்ப்பு  பயன்படுகிறது . மொழிபெயர்ப்பின் மூலம் உருவான சில படைப்பாளிகள் , நூல்கள் வரலாற்றில்  முக்கியப் பங்கு வகிக்கின்றன .

ஜெர்மன் மொழி -  ஷேக்ஸ்பியர்

இராமாயணம் -  கம்பர்

கீதாஞ்சலி -  இரவீந்திரநாத் தாகூர் - நோபல் பரிசு பெற்றவர் .

நேரடி மொழிபெயர்ப்பாக  பிரெஞ்சு,  ஜெர்மன் ,  ஆப்பிரிக்கா,  லத்தீன் ,  அமெரிக்கா முதலான நாடுகளின் நூல்கள் இன்று கிடைக்கத் தொடங்கிய  இருப்பது நல்ல பலனை அளிக்கும் .

அறிவியல் கருத்துகள் :

         மொழிபெயர்ப்பின் மூலம்    அறிவியலை வளரும் நாடுகளின்  பல்வேறு துறைகளில் பயன்படுத்தி வருகின்றனர் . மொழிபெயர்ப்பு இல்லையெனில்  உலகை  வலையாகப்  பிடித்திருக்கின்ற  ஊடகத்தின்  வளர்ச்சி இல்லை .

பல்துறை வளர்ச்சி :

* தொலைக்காட்சி ,  வானொலி,  திரைப்படம்,  இதழ்கள் ,  விளம்பரமொழி போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பினால் தான் வளர்ச்சி பெறுகின்றன .

* இதனால் புதுவகையான சிந்தனைகள் மொழிக் கூறுகள் பரவுகின்றன .

தமிழுக்குச் செழுமை :

  *மொழிபெயர்ப்பினால்  புதிய சொற்கள் உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது . 

* உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ,  பிற மொழி இலக்கியப் படைப்புகளையும் அறிந்து    தமிழ் இலக்கியத்தை வளப்படுத்த முடிகிறது .

முடிவுரை:-

தமிழின் தொன்மையான இலக்கியங்கள் முன்னரே மொழிபெயர்க்கப்படட்டு அறிமுகமாகி இருப்பதால் தமிழின் பெருமையை உலகெங்கும் முறையாக பரவியிருப்பதற்கு  மொழிபெயர்ப்புக் கல்வி இன்றியமையாதது .

Similar questions