India Languages, asked by dhivakarganessane, 3 months ago


32. பால் எத்தனை வகைப்படும்? அவற்றை எழுதுக​

Answers

Answered by XxJokingkidxX
7

Answer:

6 paal

Aan paal

pen paal

adhuku mela theriyala

Answered by venkatakrishnan38
11

Explanation:

பால்

பால் என்றால் பிரிவு என்று பொருள். உலகில் உள்ள பொருள்கள் அனைத்தையும் திணை அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,

1) உயர்திணைப் பால்

2) அஃறிணைப் பால்

என்பவை ஆகும்.

  • உயர்திணைப் பால்

உயர்திணைப் பிரிவினரைக் குறிப்பது உயர்திணைப் பால் எனப்படும். உயர்திணைப் பால் மூன்று வகைப்படும். அவை,

1) ஆண் பால்

2) பெண் பால்

3) பலர் பால்

● ஆண்பால்

உயர்திணைப் பொருள்களில் ஆண்களைக் குறிப்பது ஆண்பால் எனப்படும்.

(எ.கா) வளவன், செழியன்

● பெண்பால்

உயர்திணைப் பொருள்களில் பெண்களைக் குறிப்பது பெண்பால் எனப்படும்.

(எ.கா) யாழினி, மாலினி

● பலர்பால்

உயர்திணையில் உள்ள ஆண், பெண்களில் பலரைக் குறிப்பது பலர்பால் எனப்படும்.

(எ.கா) மக்கள், ஆண்கள், பெண்கள்

இந்த எடுத்துக்காட்டுகளில் மக்கள் என்னும் சொல் ஆண், பெண்களில் பலரைக் குறிக்கிறது.

ஆண்கள் என்னும் சொல் ஆண்களில் பலரைக் குறிக்கிறது.

பெண்கள் என்னும் சொல் பெண்களில் பலரைக் குறிக்கிறது.

  • அஃறிணைப் பால்

அஃறிணைப் பொருள்களைக் குறிப்பது அஃறிணைப் பால் எனப்படும். அஃறிணைப் பால் இருவகைப்படும். அவை,

1) ஒன்றன் பால்

2) பலவின் பால்

● ஒன்றன் பால்

அஃறிணைப் பொருள்களில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பது ஒன்றன் பால் எனப்படும்.

(எ.கா) கல், மரம்

● பலவின் பால்

அஃறிணைப் பொருள்களில் பலவற்றைக் குறிப்பது பலவின் பால் எனப்படும்.

(எ.கா) அவை, வீடுகள், மாடுகள்

உயர்திணைப் பால், அஃறிணைப் பால் ஆகிய இரண்டையும் சேர்த்துப் பால்களின் எண்ணிக்கை ஐந்து.

1) ஆண்பால்

2) பெண்பால்

3) பலர்பால்

4) ஒன்றன் பால்

5) பலவின் பால்

answer

Similar questions