(4) 1. வாய்மையே வெல்லும் முன்னுரை உண்மையின் இலக்கணம்-வாய்மையின் உயர்வு-முடிவுரை
Answers
Answer:
இந்த பதிவில் வாய்மையே வெல்லும் கட்டுரை பதிவை காணலாம்.
“தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்” எந்த ஒரு சூழ்நிலையிலும் இறுதியில் தர்மமே வெல்லும் என்பது நிதர்சனம்.
நாம் அனைவரும் சத்தியம், உண்மையின் படி வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் வாழ்வில் மகிழ்ச்சி நிம்மதி நீடிக்கும்.
வாய்மையே வெல்லும்
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத செயல்” என்கிறார் வள்ளுவர்.
அதாவது வாய்மை எனப்படுவது பிறருக்கு தீங்கு விளைவிக்காத செயல்கள் வாய்மை எனும் வகைக்குள் அடக்கப்படுகின்றன. ஒழுக்கம் நிறைந்த மனிதர்கள் வாய்மையினை கடைப்பிடிப்பார்கள்.
வாய்மை எனப்படுவது அதாவது மனிதன் வாழ்வில் மனசாட்சியோடு தான் வாழ்வனைத்தும் வாழ்ந்தாக வேண்டும். மனச்சாட்சிக்கு ஏற்ப மனிதன் வாழ்வதனையே வாய்மை என்று கூறலாம்.
நன்மையினை பயக்குமாக இருந்தால் பொய்யினை கூறுவது கூட நன்மையை பயக்கும் என்கிறார் வள்ளுவர் இதனை “பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்” என்று கூறுகிறார்.
வாய்மையின் வழி வாழ்பவர்கள் மன நிறைவுடன் வாழ்வதனை நாம் அவதானிக்கலாம். வாய்மையோடு வாழ்கின்ற வாழ்க்கை தான் அறம் என்று திருக்குறள் கற்பிக்கின்றது.
வாழ்வில் எந்தநிலை வரினும் மனம் தளராது சத்திய வழிநின்றவர்கள் என்றும் மங்காப்புகழ் உடையவர்களாக இம் மண்ணில் வாழ்ந்து போயுள்ளனர்.
உதாரணமாக அரிச்சந்திரனுடைய வாழ்க்கையானது வாழ்வில் எவ்வகையான துன்பங்கள் சோதனைகள் வந்த போதிலும் நேர்மை தவறாது பொய்யுரைக்காது வாழ்ந்தவர்.
வாய்மையின் வழியில் வாழ்பவர்களை இறைவன் சோதிப்பான் ஆனால் ஒருபொழுதும் கைவிடமாட்டான். ஆனால் வாய்மை தவறியவர்களுக்கு நிறையவே கொடுப்பான் ஆனால் கைவிட்டுவிடுவான்