4. மின்னணு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது அ) மின் + னணு ஆ) மின்ன + அணு இ) மின்னல் + அணு ஈ) மின் + அணு
Answers
Explanation:
i think my answer ஈ ) மின் +அனு i think
மின் + அணு
கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வார்த்தையை இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளாக பிரிக்க வேண்டும். அப்படி பிரித்து எழுதும் பொழுது பிரிக்கப்பட்ட இரண்டு சொற்களும் தனி தனியாக நின்று பொருள் தர வேண்டும். அதுவே சரியான முறையில் பிரித்து எழுதப்பட்ட வார்த்தைகள் ஆகும்.
மின்னணு என்னும் சொல்லை இரண்டாக பிரிக்கலாம்.
மின் + அணு
இதில் மின் எனும் சொல் தனித்து நிற்கும் பொழுது மின் என்ற பொருளை தருகிறது.
அதேபோல், அணு என்னும் சொல்லும் தனித்து நின்று பொருள் தருகிறது.
மற்ற விடைகளான
மின்+ னணு
இதில் மின் என்னும் சொல் மட்டுமே பொருள் தருகிறது.
னணு என்னும் சொல் பொருள் தருவதில்லை. எனவே இது தவறான விடை ஆகும்.
மின்னல்+அணு
இதில் இரண்டு சொற்களும் பொருள் தந்தாலும், இவ்விரண்டு சொற்களையும் சேர்த்து எழுதும் பொழுது மின்னலணு என்றாகிறது.
எனவே, இதுவும் சரியான விடையன்று.
மின்ன+அணு
இதில் மின்ன என்னும் சொல் பொருள் தருவதில்லை. எனவே, இதுவும் தவறான விடை ஆகும்.