6. கூகையையும் காக்கையையும் எடுத்துக்காட்டி வள்ளுவர் விளக்குவது யாது?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கைவென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
விளக்கம்:
இந்த கருத்தை கீழ்க்கண்ட குறளில் வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
(அதிகாரம்: காலமறிதல் குறள் எண்:481)
பகற்பொழுதில் ஆந்தையை வென்றுவிடும் காக்கை இருள் நேரத்திலே ஆந்தையிடும் தோற்றுவிடும். ஒரு செயலில் வெற்றியடைவதற்கு காலமறிதலும் வேண்டும். கூகை வலியதுதான் என்றாலும் பகலில் அதைக் காக்கை வென்றுவிடும். அதுபோல மாறுபாடு கொண்டவரை வெல்லக் கருதுவோர்க்கு தக்க காலம் வேண்டும்.
ஏற்ற காலமில்லாதபோது வலிமையிருந்தும் பயனில்லை. காலம் என்பது நேரப் பொழுது மட்டுமன்றி சூழல், இயற்கையின் தட்பவெப்பநிலை, இடப்பெயர்வு ஏற்பாட்டியல் முதலியனவற்றையும் கருதுவது.
Similar questions