India Languages, asked by gowrir632, 2 months ago

9. நீ அறிந்த கவிஞர் ஒருவரைப் பற்றி அரைப்பக்க அளவில் கட்டுரை வரைக
(குறிப்பேட்டில் எழுதுக.)
10. உனக்குத் தெரிந்த பாரதியார் பாடல் ஒன்றனை எழுதுக.
விடை:​

Answers

Answered by cutebabyofficial
25

9) Answer

நான் விரும்பும் கவிஞர் - பாரதியார்

முன்னுரை:

அச்சமில்லை அச்சமில்லை என்று, தம் கவிதைகள் மூலம் நம்மிடையே விடுதலை உணர்வை ஊட்டிய மகாகவி பாரதியாரே நான் விரும்பும் கவிஞர் ஆவார். அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

இயற்றிய நூல்கள்:

பாரதியார் பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, ஞானரதம், புதிய ஆத்திச்சூடி, சந்திரிகையின் கதை, தராசு போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

சிறப்புப் பெயர்கள்:

பாரதியார், முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்திதாசன் என்று சிறப்புப் பெயர்களால் வழங்கப்பட்டார். கவிஞராக, செய்தியாளராக, பத்திரிகை ஆசிரியராக, விடுதலை வீரராக, தமிழாசிரியராக விளங்கியவர் பாரதியார்.

முடிவுரை:

நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா என்று புகழ்பெற்ற பாரதியார் 11-09-1921 அன்று இம்மண்ணை விட்டு மறைந்தார். ஆனால் அவரின் புகழ் இன்றும் என்றும் நிலைத்திருக்கும்.

Attachments:
Answered by ravilaccs
0

Answer:

இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி, புதுமைக் கவிஞர், தேசியக் கவி, மகாகவி எனப் பாராட்டப்பட்டவர் நம் பாரதியாரே ஆவார். பாட்டுக்கொரு புலவனாய்த் திகழ்ந்த பாரதி தம் பாடல்கள் மூலம் மக்களிடையே தமிழ்ப்பற்று, விடுதலை உணர்வு ஆகியவற்றை வளர்த்தார்

Explanation:

முன்னுரை:

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ' திருக்குறள்'  என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர், உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர், இவர் உலக மக்களால், 'தெய்வப்புலவர்', 'பொய்யில் புலவர்'. 'நாயனார்', 'தேவர்', 'செந்நாப்போதர்', 'பெருநாவலர்', 'பொய்யாமொழிப் புலவர்' என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

பொருளுரை:

திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால், அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும், மதுரையில் பிறந்ததாகவும், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும், அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால், இதுவரை இவை எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை.

திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக 'உலகப் பொது மறை', 'முப்பால்', 'ஈரடி நூல்', ' உத்தரவேதம்', 'தெய்வநூல்', 'பொதுமறை', 'பொய்யாமொழி', 'வாயுறை வாழ்த்து', 'தமிழ் மறை', 'திருவள்ளுவம்' போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள் கணக்கில் அடங்கா.

திருக்குறளை எழுதி, உலக இலக்கிய அரங்கில், தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிமிர நிற்கும்படி செய்த உன்னதப் படைப்பாளி, திருவள்ளுவர். தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய திருக்குறள், உலகப்புகழ் பெற்ற இலக்கியமாக மாறி.தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நூல், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண் கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில்இருக்கிறது. மேலும், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம்,மொழி,பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவதுபோல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக 'உலகப் பொது மறை', 'முப்பால்', 'ஈரடி நூல்', 'உத்தரவேதம்' 'தெய்வநூல்', 'பொதுமறை', 'பொய்யாமொழி', 'வாயுறை வாழ்த்து', 'தமிழ் மறை', 'திருவள்ளுவம்' போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்ககின்றனர்.

மொழிப்பற்று:

பல மொழிகளைக் கற்றிருந்த பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழின் சிறப்பை எடுத்துரைத்தார்.

நாட்டுப்பற்று:

பாரதத் தாயின் அடிமைத்தனத்தை தகர்த்தெறிய இவர் எழுதிய பாடல்கள் இளைஞர்களைவீறு கொண்டு எழச் செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேடைகளிலும் வீதிகளிலும் இவருடைய பாடல்களையே பாடினார்கள். சமுதாயத் தொண்டு: சாதிக் கொடுமைகள், பெண்ணடிமை, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை இந்நாட்டிலிருந்து விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மதவெறிப் பிடித்து அலைபவர்களின் போக்கினைக் கண்டித்தார்.

படைப்புகள்:

பாரதியார் எண்ணற்ற கவிதை, உரைநடை நூல்களைப் படைத்துள்ளார். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞானரதம், தராசு போன்ற எண்ணற்ற படைப்புகளைப் படைத்துள்ளார்.

முடிவுரை:

"வள்ளுவன் வாக்குப்படி வாழ்வோம்!!

வாழ்வு சிறக்க உயர்வோம்!!

திருவள்ளுவர் மறைந்தாலும், அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல், இக்கால மனிதர்களுக்கு ஓர் வழிகாட்டியாக இருந்து தமிழர்களின் புகழையும் உலகளவில் ஓங்கச் செய்கிறது.இத்தகைய பெருமைமிகு திருவள்ளுவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் அவர் கூறிய குறளின்படி வாழ்ந்து வீடுபேறு அடைவதாகும்

10.

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்.

நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்

கைவசமாவது விரைவில் வேண்டும்

தனமும் இன்பமும் வேண்டும்

தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும் .

காரியத்தில் உறுதி வேண்டும்

பெண் விடுதலை வேண்டும்

பெரிய கடவுள் காக்க வேண்டும் .

மண் பயனுற வேண்டும்.

வானகம் இங்கு தென் பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்.

Reference Link

  • https://brainly.in/question/14391345
  • https://brainly.in/question/39397191
Similar questions