A.B என்ற இரு செல் வகைகளில் படங்களை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு. அ) செல் A என்பது குச்சி செல். இது விழித்திரையின் அனைத்துப் பகுதியிலும் காணப்படுகிறது. ஆ) செல் A என்பது கூம்பு செல். இது ஃபோவியாவின் (மஞ்சள் தானத்தின்) மையப்பகுதியில் செறிவாக உள்ளது. இ) செல் B யானது செறிவான ஒளியில் நிறப்பார்வையுடன் தொடர்புடையது. ஈ) செல் A யானது செறிவான ஒளியை உணரக்கூடியது.
Attachments:
Answers
Answered by
0
செல் B யானது செறிவான ஒளியில் நிறப்பார்வையுடன் தொடர்புடையது
- செல் A என்பது குச்சி செல் மற்றும் செல் B என்பது கூம்பு செல் ஆகும்.
விழித்திரை
- ஒளியினை உணரக்கூடிய விழித்திரைப் பகுதி ஆனது மூன்று வகையாக செல்களை கொண்டு உள்ளது.
- அவை கூம்பு மற்றும் குச்சி செல்கள் என்ற ஒளியுணர் செல்கள், இரு துருவச் செல்கள் மற்றும் நரம்பு செல்திரள் செல்கள் ஆகும்.
- மாக்குலா லூட்டியா என்பது விழித்திரையின் பின்புற மையத்தில் உள்ள மஞ்சள் நிறப்பகுதி ஆகும்.
- இந்த பகுதி ஆனது தெளிவான பார்வைக்குக் காரணமாக உள்ளது.
- மாக்குலா லூட்டியாவின் மையப் பகுதியில் ஒரு சிறிய பள்ளம் உள்ளது.
- இதற்கு ஃபோவியா சென்ட்ராலிஸ் என்று பெயர்.
- கூம்பு செல்கள் ஃபோவியா சென்ட்ராலிஸில் நிறைந்து காணப்படுகிறது.
- கூம்பு செல்கள் செறிவான ஒளியில் நிறப்பார்வையுடன் தொடர்பு உடையது ஆகும்.
Attachments:
Similar questions