மின்னோட்டத்தை AC மின்னியற்றியின்சுருளிருந்து வெளிச் சுற்றுக்கு எடுத்துச்செல்லும் மின்னியற்றியின் பகுதி(அ) புலக் காந்தம்(ஆ) பிளவு வளையங்கள்(இ) நழுவு வளையங்கள்(ஈ) தூரிகைகள்
Answers
Answer:
Explanation:
நீர் (water) என்பது H2O என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்றும் நெடியற்றும் ஒரு ஒளிபுகும் தன்மையும் இச்சேர்மத்தின் தோற்றப் பண்புகளாகும். புவியிலுள்ள ஓடைகள், ஏரிகள், கடல்கள், அனைத்தும் பெரும்பாலும் நீராலேயே ஆக்கப்பட்டுள்ளன. மேலும் உலகில் காணப்படும் உயிரினங்கள் அனைத்திலும் நீரானது நீர்மவடிவில் காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்கு ஆற்றலையோ, கனிம ஊட்டச்சத்துகள் எதையுமோ நீர் தருவதில்லை என்றாலும் அவ்வுயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும். ஒரு நீர் மூலக்கூற்றில் ஓர் ஆக்சிசன் அணுவுடன் இரண்டு ஐதரசன் அணுக்கள் சகப் பிணைப்பு மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. திட்டவெப்ப அழுத்தத்தில் இது ஒரு நீர்மமக இருந்தாலும் திடநிலையில் இது பனிக்கட்டியாகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது. மழை வடிவில் இது பூமியில் வீழ்படிவாகவும் மூடுபனியாக தூசுபடலமாகவும் உருவாகிறது. நீர்ம நிலைக்கும் திடநிலைக்கும் இடைப்பட்ட தொங்கல் நிலையிலுள்ள நீர்த்துளிகள் மேகங்களாக மாறுகின்றன. இறுதியாக இந்நிலையிலிருந்து பிரிந்து படிகநிலைப் பனிக்கட்டி வெண்பனியாக வீழ்படிவாகிறது. நீரானது தொடர்ச்சியாக நீராவிபோக்கு, ஆவி ஒடுக்கம், வீழ்படிவு போன்ற செயல்களுடன் நீர்ச்சுழற்சிக்கு உட்பட்டு இயங்கிக்கொண்டே கடலைச் சென்றடைகிறது.
தூரிகைகள்
மின்னியற்றி
- மின்னியற்றி அல்லது மின்னாக்கி என்பது இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றக் கூடிய கருவியாகும்.
AC மின்னியற்றி
- AC மின்னியற்றி பிளம்மிங்கின் வலக்கை விதிப்படி செயல்படுகிறது.
- ஒரு மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றி (AC) யில் ஒரு நிலை காந்தத்தின் இரு துருவங்களுக்கு இடையே சுழலும் தன்மை உள்ள செவ்வக வடிவ கம்பிச் சுருள் மின்சட்டம் வைக்கப்பட்டுள்ளது.
- சுருளின் இரண்டு முனைகளும் இரண்டு நழுவும் வளையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- இந்த நழுவும் வளையங்களுக்கு உட்புறம் மின்காப்பு செய்யப்பட்டுள்ளது. இரண்டு தூரிகைகளின் வெளி முனைகள் வெளிப்புற சுற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- மின்னோட்டத்தை AC மின்னியற்றியின் சுருளிருந்து வெளிச் சுற்றுக்கு எடுத்துச் செல்லும் மின்னியற்றியின் பகுதியும் இந்த தூரிகைகள் தான்.