India Languages, asked by Dikanku3036, 10 months ago

Aen Thai nadu essay in Tamil

Answers

Answered by Indianpatriot
0

Answer:

Explanation:

இந்தியா (India), அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு (Republic of India)[கு 1] தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன. இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளன.[1]

பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது.[2] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நூற்று இருபத்தியொரு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது.[3]

பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. உலகின் பண்டைய நாகரிகங்களில் இந்தியாவும் ஒன்று ஆகும். சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா-மொகஞ்சதாரோ என்று அழைக்கப்படும் நாகரிகம் இங்கு தோன்றியது ஆகும்.

இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு தலைமை மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகத்து 15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.

31 அக்டோபர் 2019 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் ஆணியின் பேரில் இந்தியாவின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டது. [4][5]

Similar questions