India Languages, asked by SAMGLAD, 10 months ago

சிந்து எண்பது ?
answer please ?​

Answers

Answered by Anonymous
3

Answer:

காவடிச் சிந்து இசைப் பாவகைளில் ஒன்றாகிய சிந்துப் பாவகை வடிவங்களில் ஒன்று. கலம்பக உறுப்பாக வரும் சிந்து வேறு.

சிந்து என்பது இசைத்தமிழ் பாகுபாடுகளில் ஒன்றாகும். அது ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பு. எடுப்பு 1, தொடுப்பு 1, உறுப்பு 3 என்று 5 உறுப்புகளைக் கொண்டது ‘சிந்து’ பாடல். (அவை பல்லவி, அநுபல்லவி, மூன்று கண்ணிகள் அடங்கிய சரணம் ஆகும்.)

காவடிச் சிந்து பல்லவியும் அநுபல்லவியும் இன்றிச் சரணங்களுக்குரிய கண்ணிகளை மாத்திரம் பெற்று வரும். அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து என்னும் சிற்றிலக்கியத்தில் பலராலும் போற்றப்படும் நூலாகும்.

இது காவடி ஆட்டத்திற்குப் பாடப்படும் இசைப் பாவகையாகும். தமிழ் நாட்டிலே பண்டைக்காலம் தொடக்கம் பேணப்பட்டு வரும் ஒரு நாட்டார் வழக்கிலுள்ள இசை மரபே காவடிச் சிந்து எனலாம். முற்காலத்திலே முருகப் பெருமானின் வழிபாட்டிற்காகக் பால் எடுத்து வருபவர்கள் ஆடல் பாடல்களுடன் ஆலயங்களை நோக்கிச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் பொழுது அவர்களின் ஆட்டத்திற்குப் பாடப்படும் பாடல் வகைகளிலிருந்து இக்காவடிச் சிந்து என்ற பாவடிவம் தோன்றி உருவாகியது.

சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தினார்.

Explanation:

Similar questions