Athi varadar history essay in 100 words in Tamil
Answers
Answer:
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. கோவிலின் வடக்கே உள்ள நூறுகால் மண்டபத்தில் அனந்தசரஸ் எனப்படும் நீராழி மண்டபத்தில் நீரில் மூழ்கியபடி கருங்கற்கலால் ஆன பாறைக்குள் அத்திமரத்தால் ஆன அத்தி வரதராஜ பெருமாள் சயன நிலையில் இருக்கும் இவர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 48 நாட்கள் மட்டுமே வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
Mark as a brain list kr diyo ans kkk
Answer:
அத்தி வரதர்
அத்தி வரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்தி வரதரின் திருவுருவச் சிலையை வெளியே எழுந்தருளச் செய்து, கோயிலின் வசந்த மண்டபத்தில் வைப்பர். அவர் 48 நாட்கள் பொது மக்களுக்கு சேவை சாதிப்பார். இதில் முதல் 24 நாட்கள் சயன திருக்கோலம், அடுத்த 24 நாட்கள் நின்ற திருக்கோலம் என சேவை சாதித்து ஒரு மண்டல காலத்துக்கு பிறகு மறுபடியும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.