ஒரு தாவரவியல் வகுப்பில் ஆசிரியர் C4 தாவரங்கள் ஒரு குளுக்கோஸ் உற்பத்திக்கு 30 ATP களை பயன்படுத்துவதாகவும், C3 தாவரங்கள் 18 ATP களை மட்டுமே பயன்படுத்துவதாகவும் விளக்குகிறார். பின்னர் அதே ஆசிரியர் C4 தாவரங்கள் தான் C3 யை விட சிறந்த தகவமைப்பு பெற்றுள்ளதாக கூறுகிறார். இந்த முரண்பாட்டிற்கான காரணங்களை உன்னால் கூற முடியுமா?
Answers
Answered by
0
சிறந்த தகவமைப்பு
- ஒரு தாவரவியல் வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம், C4 தாவரங்கள் ஒரு குளுக்கோஸ் உற்பத்திக்கு 30 ATP களை பயன்படுத்துகின்றன.
- அதே சமயம் C3 தாவரங்கள் ஒரு குளுக்கோஸ் உற்பத்திக்கு 18 ATP களை மட்டுமே பயன்படுத்துகின்றன.
- எனினும் C4 தாவரங்கள் தான் C3 தாவரங்களை விட சிறந்த தகவமைப்பு பெற்று உள்ளதாக கூறுகிறார்.
- C3 தாவரங்கள் ஆனது அதிக அளவிலான 50 % ஆற்றலை ஒளிச் சுவாசத்தினால் இழக்கின்றது.
- ஆனால் C4 தாவரங்கள் நடைபெறும் ஒளிச் சுவாசம் ஆனது மிக குறைவானதாகவும் மற்றும் இல்லாமலும் உள்ளது.
- இதன் காரணமாகவே C4 தாவரங்கள் தான் C3 தாவரங்களை விட சிறந்த தகவமைப்பு பெற்று உள்ளது.
Similar questions