India Languages, asked by edwerd4652, 9 months ago

Cl2 மூலக்கூறில் உள்ள ‘Cl’ அணுக்களுக்கு
இடையில் உள்ள தூரம் 1.98 A0 எனில் ‘Cl’
அணுவின் ஆரம் __________

Answers

Answered by steffiaspinno
0

0.99 A^o

அணு‌வி‌ன் ஆர‌ம்  

  • ஒரு அணு‌‌வி‌ன் அணு‌க்கரு மைய‌த்‌தி‌ற்கு‌ம், இணை‌‌திற‌ எல‌க்‌ட்ரா‌ன் உ‌ள்ள வெ‌ளி‌க் கூ‌ட்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள தூரமே அ‌ந்த அணு‌வி‌ன் ஆர‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.  

சக‌ப்‌பிணை‌ப்பு ஆர‌ம்

  • உலோகம‌ற்ற த‌னிம‌ங்க‌‌ளி‌ல் உ‌ள்ள அணு‌வி‌ன் ஆர‌ம் சக‌ப்‌பிணை‌ப்பு ஆர‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ஒ‌ற்றை சக‌ப்‌பிணை‌ப்‌பினா‌ல் ‌பிணை‌‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ள இரு ஒ‌த்த அணு‌க்க‌ளி‌ன் அணு‌க்கரு‌க்களு‌க்கு இடையே உ‌ள்ள தொலை‌வி‌ன் பா‌தியே அ‌‌‌ந்த அணு‌வி‌ன் சக‌ப்‌பிணை‌ப்பு ஆர‌ம் ஆகு‌ம்.
  • எனவே Cl_2 மூலக்கூறில் உள்ள இரு Cl அணுக்களுக்கு இடையில் உள்ள தூரம் 1.98 A^o எ‌னி‌ல் குளோ‌ரி‌ன் அணு‌வி‌ன் ஆர‌ம்  
  • = \frac {1.98} {2}
  • = 0.99 A^o
Similar questions