India Languages, asked by rekhakc81, 9 months ago

பாய்ச்சல் கட்டுரை class 10

Answers

Answered by vaishnavisakthi
164

hope it will help you நண்பா/நண்பி

Attachments:
Answered by sarahssynergy
77

முன்னுரை

உண்மைக் கலைஞன் தன் கலையில் முழு ஈடுபாட்டைக் காட்டுவான். கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தன் கலையைப் பின்பற்ற, தகுந்த வாரிசு உருவாகிற போது அவன் கொள்கிற மகிழ்ச்சி அளப்பரியது. தக்கையின் மீது நான்கு கண்கள் என்ற சிறுகதைத் தொகுப்பில் பாய்ச்சல் கதையை எழுதியுள்ளார் ஆசிரியர் சா.கந்தசாமி

Explanation:

அனுமார் ஆட்டம்:

  • ஆளுயரக் குரங்கு ஒன்று மரத்தில் இருந்து இறங்குவது கண்டு அதிசயித்தான் அழகு, நாதசுரமும் மேளமும் ஒன்றாக இழைந்து ஒலித்தன. வலது, இடது எனக் கால் மாற்றி சதங்கை ஒலியோடு ஆடியது அனுமார் என உணர்ந்தான். கடையில் தொங்கிய வாழைத்தாரில் இருந்து பழங்களைப் பறித்துக் கூட்டத்தில் உள்ளவர்களுக்குக் கொடுத்தார். கீச் கீச் என்று கத்திக் கொண்டே பந்தல் காலைப் பற்றி மேலேறினார். பெருங்குரல் எழுப்பியபடி கீழே குதித்தபோது வாலில் தீப்பந்தம். கரணமடித்தல், பெரிய சத்தம். பெரிய சிரிப்பு என அனுமார் ஆட்டம் உச்சம் தொட்டது.

வாரிசை வாழ்த்தும் கலைஞன் :

  • வால் பிடித்து வந்த ஆள் அழகிடம் கை மாற்றிவிட்டான். அனுமாரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓடி ஓடி வால் சுமந்தான் அழகு ஆட்டம் ஓய்ந்தது. கழுத்து மணி அறுந்து விழுந்தது கூடத் தெரியாது அனுமாருக்கு அவ்வளவு ஈடுபாடு ஆட்டத்தில் களைப்பில் எதிரே வந்த கார்காரர் கொடுத்த பணத்தைக் கூட மேளக்காரனை வாங்கச் சொன்னார்.
  • வாய், வேட்டி, மார்புக்கச்சை, சதங்கைகளைக் கழற்றிப் போட்ட படி சுவரில் சாய்ந்தார். அவரைப் போல ஆட ஆசை எனச் சொன்னான் அழகு. உடனே உற்சாகம் தொற்றியது. காலில் சலங்கை, பின்னர் வாலில் தீப்பந்தம் கட்டி அழகு ஆட இவர் உற்சாகப்படுத்தியபடி ஓட இறுதியில் அழகு மட்டும் ஆடிக்கொண்டிருந்தான்.

முடிவுரை:

  • அனுமார் ஆட்டத்தில் பாய்ச்சல் முக்கியம். என்னாடா எனக்கா பாச்சக் காட்டுற என்று கத்தியபடி அழகைப் பிடிக்க வந்த அனுமாரின் ஆட்டம் முடிந்தது. தனக்கு ஒரு வாரிசு உருவாகி விட்டதைக் காணும் போது உடம்பின் வலியும் வேதனையும் இருமலும் ஒரு பொருட்டல்ல. கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளக் கலைஞனுக்குக் கொடுப்பது உயிரானாலும் வலி தெரிவதே இல்லை.

Similar questions