India Languages, asked by qasimmgibro, 3 days ago

கோபல்லபுரத்து மக்கள் கதை சுருக்கம் class 10 tamil​

Answers

Answered by presentmoment
44

முன்னுரை ;

பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல். கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர் கி.ராஜநாராயணன். கோபல்லபுரத்து அன்னமய்யா விருந்தோம்பலின் சான்று.

Explanation

தேசாந்திரியின் சோர்வும் தீர்வும்;

சுப்பையாவின் புஞ்சையில் அருகு எடுக்கும் வேலை. அன்னமய்யா கூட்டி வந்த ஆள் சோர்வாக இருந்தான். அவன் யார் என சுப்பையா கேட்க வரட்டும் அவன் வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றான் கொத்தாளி. லாட சன்னியாசி போல் உடை அணிந்து இருந்தான் அவ்வாலிபன். குடிக்கத் தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்சுத்தண்ணி வழங்கப்பட்டது. வேப்பமர நிழலே சொர்க்கமாக அயர்ந்து விட்டான்.

அன்னமய்யாவின் கருணை;

கள்ளியை கவலைப்பட்டார்கள் ஒழித்தது போல் அருகை ஒழிக்க முடியவில்லையே என சம்சாரிகள். விழித்தவன் தன்பெயர் பரமேஸ்வரன் என்றும் தற்போதைய பெயர் மணி என்றும் சொன்னான். ஒரு கால் உருண்டை கம்மஞ்சோற்றை இடது கையில் வைத்து, பள்ளம் பறித்து அதில் துவையல் வைத்தார்கள். அந்தக் கடுமையான பசியிலும் அரை உருண்டைதான் சாப்பிட்டான். திரும்பவும் படுத்து அமைதியாகக் கண்மூடிக் கிடந்தார்.

முடிவுரை;

அதிகாலை வேளையில் களைத்து வந்தவருக்குக் கரிசல் இதயங்கள் காட்டிய அன்பு கண்முன் படமாகிறது. கருணையுடன் மணி பார்த்த பார்வையில் நன்றி தெரிகிறது. கஞ்சிக்கலயம், சோற்றின் மகுளி, துவையல், கம்மஞ்சோறு இவற்றில் கரிசல்மண் மணக்கிறது.

Similar questions