Class - 10 Tamil
துணைப்பாடம் : இராமானுசர் நாடகத்தில் வெளிப்படும் மனிதநேயம்.
Answers
Answered by
2
ANSWER:
- இராமானுசர் நாடகத்தில் வெளிப்படும் மனிதநேயம்.
Explanation:
- இராமானுசர் தினமும் ஆற்றில் குளிக்கப் போகுமுன் முதலியாண்டான் என்ற அந்தணச் சீடரின் கரம் பற்றி நீராடப் புகுவார்.
- நீராடி முடித்த பின் அந்தணர் அல்லா “உறங்காவில்லி தாசரின்’ கரம் பற்றி எழுவார்.
- இது வர்ணாசிரம் தருமத்துக்கு எதிரானது என்றும், பிராமணன் கீழ்க் குலத்தோனைத் தொடுவது தவறல்லவா?
- இது நீர் அறியாததா? இதற்கான காரணம் என்ன என்றனர் பிற சீடர்கள்.
இராமானுசர் நாடகத்தில் வெளிப்படும் மனிதநேயம்.
- எத்தனை தான் ஞானம் பெற்றாலும், உயர்குலத்தில் பிறந்தோம் என்ற எண்ணம் எனக்குள் ஆணவமாக இருந்தால் இறைநிலை அடைய முடியாமல் போய்விடும் அல்லவா?
- எனவே இப்பிறவியின் அகங்காரத்தைப் போக்க அகங்காரமே சிறிதும் இல்லாத இந்த அடியவனைத் தீண்டி என்னைச் சுத்தம் செய்து கொள்கிறேன் என்றார்.
- “சாதியை ஒழிப்போம், ஆன்மீகத்தால் சமத்துவம் வளர்ப்போம், உயர்வு தாழ்வு நீக்குவோம் என்று வெறும் வாய்ப்பேச்சு பேசாதவராய்த் தன் செய்கையால் வாழ்ந்து காட்டியவர் இராமானுசர்.
- அவர் வழியை நாமும் பின்பற்றுவோம்.
Similar questions