class 7 இயல் 3 துணைப்பாடம் கட்டுரை
Answers
Answer:
தொல்லியலில் அகழ்வாய்வு என்பது தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர்தல், செயற்படுதல் (processing), பதிவு செய்தல் என்பவற்றை ஒருங்கே குறிக்கிறது. இச்சொல் இன்னொரு பொருளிலும் பயன்படுத்தப்படுவது உண்டு. இது ஒரு களத்தை ஆய்வு செய்வதற்கான வழிமுறையைப் பயன்படுத்துவதைக் குறிக்கும். இப்படியான அகழ்வாய்வு ஒரு குறிப்பிட்ட தொல்லியல் களம் அல்லது தொடர்புள்ள பல களங்களோடு சம்பந்தப்படுவதுடன், இது பல ஆண்டுகள் நடத்தப்படவும் கூடும்.
அகழ்வாய்வுச் செயற்பாட்டினுள் பல சிறப்பு நுட்பங்கள் உள்ளன. ஒவ்வொரு அகழ்வும் கொண்டிருக்கக்கூடிய அதற்கேயுரிய சிறப்பம்சங்கள் தொல்லியலாளர் கைக்கொள்ள வேண்டிய அணுகுமுறையைத் தீர்மானிக்கின்றன. வளம் மற்றும் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளினால் தொல்லியலாளர் விரும்பும்போதெல்லாம் அகழ்வாய்வுகளைச் செய்ய முடிவதில்லை. இதன் காரணமாக அறியப்பட்ட களங்கள் பல வேண்டுமென்றே அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்படாமல் விடப்படுகின்றன. இவை பிற்கால ஆய்வுகளுக்காகப் பாதுகாக்கப்படுகின்றன. சில வேளைகளில் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பின்னர் நடத்தப்படும் ஆய்வுகள் கூடிய பயனுள்ள விளைவுகளைத் தரும் என்ற நம்பிக்கையிலும் அகழ்வாய்வுகளைத் தாமதப்படுத்துவது உண்டு.
ஓரிடத்தில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதை, நிலம் ஊடுருவும் ராடார்கள் போன்ற தொலையுணர்தல் முறைகள் மூலம் ஓரளவு துல்லியமாகவே அறிந்து கொள்ள முடியும். இம்முறைமூலம் களமொன்றின் வளர்ச்சி குறித்த மேலோட்டமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமாயினும். நுணுக்கமான அம்சங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கு அகழ்வாய்வு இன்றியமையாதது.