India Languages, asked by gaurav61111, 9 months ago

En kanavu india speech in tamil

Answers

Answered by rram80817
5

Answer:

என் கனவு ஏழைகளற்ற இந்தியா",

"என் கனவு ஊழலற்ற இந்தியா",

"என் கனவு அனைவரும் கல்வி அறிவு பெற்ற இந்தியா "

"என் கனவு சுகாதாரமான இந்தியா "

''என் கனவு அனைத்து துறைகளிலும் முன்னணியில் இந்தியா"

இது என் கனவு மட்டுமல்ல நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு இந்தியனின் கனவும் இது தான்.என் தேசம் எந்த ஒரு நாட்டிற்க்கும் அடிமையாய் இருக்க கூடாது.ஒவ்வொரு உண்மையான இந்தியனும் மனதிற்குள் சொல்லும் சொல் நாங்கள் யாருக்கும் அடிமைடில்லை.

ஆனால் உண்மையில் நடந்துகொண்டிருப்பது என்ன, என் தேசம் களவாட பட்டுக்கொண்டிருக்கிறது ,என் தேசத்தின் வரலாறு அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது,என் தேசத்தின் பெருமையை மறைக்க உலகின் பல முன்னனி நாடுகள் ஒன்று சேர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறது.ஏற்க்கனவே என் தேசத்தின் பல பொக்கிஷங்கள் களவாடப்பட்டு விட்டன சில முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன.

இதற்க்கு வெறும் மேலை நாட்டினரை மட்டும் குறை கூற முடியாது ,நாட்டை அழிக்க அவர்கள் சூத்திரதரிகளே தவிர அதை செயல்படுத்துவது நாம் தான்.

ஒரு விவசாயம் செய்யும் தந்தையின் கனவு என் மகன் என்னை போல வெயிலில் கஷ்டப்படக் கூடாது. தறி நூர்ப்பவரின் கனவு என் மகன் என்னை போல் கஷ்ட்டப்பட கூடாது ,இப்படி தன்னை போல் தன் மகன் கஷ்ட்டப்பட கூடாது என்று எண்ணியே இன்று நம் நாட்டின் பல தொழில்கள் மறைந்து விட்டன.சில மறக்கடிக்க பட்டு வருகின்றன.

இது தொழிலில் மட்டுமில்லை பல கலைகள் இப்படித்தான் அழிக்கப்பட்டு விட்டன .சீனாவிற்கே குங்பூ கற்றுக்கொடுத்தது ஒரு தமிழன் என்று ஒரு திரைப்படம் வந்த பிறகே நமக்கு தெரிகிறது.அப்படியெனில் நாம் எந்த அளவிற்கு நம் வரலாற்றை மறந்துகொண்டிருக்கிறோம் என்று தெரியும்.இது ஒரு உதாரணம் மட்டும் தான் நம் பல புராதன நூல்கள் ,கலைகள் பல இன்று இருந்த சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டது.

வரலாற்றிற்கு மொழி எந்த அளவு அவசியம் என்பது எத்தனை பேருக்கு தெரிகிறது. சரியான ஒரு மொழி அமைப்பு இல்லாத ஒரு காரனதலேயே இன்று பல வரலாறுகள் தெரியாமலே அழிந்து விட்டன,சிலவற்றை நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம்.

ஆதிக்க மனப்பான்மையே மொழிகளின் அழிவிற்கு காரணம் என்று பலர் கூறுவர்,அது உண்மையான காரணமாக இருக்க வாய்ப்பில்லை-முக்கியமான காரணம் ஆசை, தமிழை விட ஆங்கிலம் நன்கு கற்றால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற ஒரு ஆசை இன்று தமிழை அழித்துக்கொண்டிருக்கிறது.

பிற மொழியை கற்பது தவறில்லை,ஒரு மொழியை பற்றி எதுவுமே அறியாமல் இதனால் எனக்கு எந்த பயனும் இல்லை என்று கூறி கற்பதே தவறு.

இன்று தன் குழந்தைகள் தன்னை டாடி,மம்மி என்று அழைத்தால் தான் பெருமை என்று என்னும் நிலை வந்துவிட்டது.இதன் விளைவு பல உறவுகளின் பெயரே தெரியாமல் போய் கொண்டிருக்கிறது.

நான் சாலையில் சென்று கொண்டிருந்தேன் ஒரு பள்ளி செல்லும் சிறுவனிடம் உன் பெயர் என்ன என்று கேட்டேன் ,அவன் என்னிடம் - Hello Uncle ,What language do you speak? I can't understand your question? என்றான்,திடீரென முகத்தில் யாரோ தண்ணீரை ஊற்றினார்கள் ,விழித்து பார்த்தால் கனவு.அது கனவாகவே இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு எழுந்து அம்மாவிடம் என்ன டிபன் என்றேன் ,அம்மா இட்லி என்றால் சரி நான் சாப்பிட்டுவிட்டு ப்ரௌசிங் சென்டர் போகணும் சீக்கிரம் என்று சொல்லிகொண்டே நகர்ந்தேன்..

என் கனவு தொடரும்......

Similar questions