குழந்தைகள் நலனில் தேசம் essay
Answers
Explanation:
ஒரு குழந்தை அறிவுடைய ஆரோக்கியமான குழந்தையாக மாற, அதன் முதல் ஆயிரம் நாட்களை நாம் கவனமுடன் கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில், முதல் பிறந்த நாளை எட்டாமலேயே இறக்கின்ற குழந்தைகள் ஏராளம். குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்க பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது. இந்தியாவில் தான் 50 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். குழந்தைகள் கர்ப்பகாலத்தில் 270, ஒரு வயது நிறைவில் 365, 2வது வயது நிறைவில் 365 என ஆயிரம் நாட்களாக கணக்கிடுகிறோம். இக்காலத்தில் தான் தாய்மார்கள் எவ்வாறு கவனம் செலுத்த வேண்டும் என்பதை பார்ப்போம்.
கர்ப்பகாலம் : கர்ப்பம் என்று தெரிந்தவுடன் டாக்டரை அணுகவேண்டும்.அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், தனியார் அல்லது அரசு மருத்துவமனையிலோ கர்ப்பிணிகள் பதிவு செய்ய வேண்டும். கர்ப்பிணிகள் இக்கால கட்டத்தில் 10 முதல் 12 கிலோ வரை எடை அதிகரித்து இருக்க வேண்டும். வயிறு, சிறுநீரகம், ரத்தம், ரத்த அழுத்த பரிசோதனை அவசியம்.கர்ப்பகாலத்தில் ரணஜன்னி தடுப்பூசி போடப்படும். ஒரு மாத இடைவெளியில் டிடி 2வை தவறாமல் போட வேண்டும். இப்போது 100 இரும்பு சத்து மாத்திரைகள் அவசியம் சாப்பிட வேண்டும். ரத்தசோகையில் பாதிக்கப்பட்டால் 200 மாத்திரைகள் எடுக்கலாம். இதையும் முதல் மாதத்திலிருந்தே சாப்பிடவும். அங்கன்வாடி மையத்தில் தரப்படும் இணை உணவு 160 கிராமை தவறாமல் எடுக்க வேண்டும்.