India Languages, asked by vishal8044, 1 year ago

Essay about indiya ranuva Pangu in Tamil

Answers

Answered by hariprakash2857
0

Answer:

இந்தியத் தேசிய இராணுவம் (Indian National Army – INA) என்பது இரண்டம் உலகப் போரின்போது பிரித்தானிய இந்திய அரசினை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு படை. இது சப்பானியப் பேரரசின் உதவியுடன் இந்தியாவின் காலனிய அரசை எதிர்த்துப் போரிட்டது. ஆரம்ப காலத்தில் சப்பானியர்களால் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இந்திய இராணுவத்தின் இந்திய போர்க்கைதிகள்இதில் இடம் பெற்றிருந்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்த சென்றவர்கள் ஆகிய தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர்.

1942 இல் சிங்கப்பூர் சப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், ராஷ் பிஹாரி போஸ் என்பவரால் இந்திய தேசிய இராணுவம் உருவாக்கப்பட்டது. இதன் படைத்தலைவர் மோகன் சிங் ஆவார். ஆனால் விரைவில் அது ஆதரவின்றி கலைந்து போனது. மீண்டும் 1943 இல் நேதாஜி சுபாஷ் சந்திர போசினால் புத்துயிர் அளிக்கப்பட்டு மீட்டுருவாக்கப்பட்டது. போசின் இந்திய இடைக்கால அரசின் படைத்துறையாக செயலாற்றியது. சப்பானியப் படைகளுக்குத் துணையாக மலேசியா மற்றும் பர்மா போர்த்தொடர்களில் பிரித்தானியப் படைகளுக்கு எதிராகப் போரிட்டது. சப்பானிய மற்றும் பிரித்தானியத் தரப்புகள் தங்களது தேவைகளுக்கு இப்படையினை பெரிய அளவில் பயன்படுத்துக்கொண்டன. சுமார் 43,000 உறுப்பினர்களைக் கொண்ட இப்படை போர்க்களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் இதன் உறுப்பினர்கள் மீது பிரித்தானிய அரசு சாட்டிய குற்றங்களும், அது தொடர்பான வழக்குகளும் இந்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

அடக்குமுறைத் தன்மையோடு இந்தியா இரண்டாம் உலகப் போரில் இறக்கிவிடப்பட்டதற்கு 1937 மற்றும் 1939 இல் இரண்டுமுறை காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ்போஸால் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த போரில் பங்கேற்பதற்கு எதிராக முயற்சி எடுத்ததற்குப் பின்னர் அவர் 1939 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அனைத்திந்திய ஃபார்வர்ட் பிளாக் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். இவருக்கு பக்க பலமாகபசும்பொன் முத்துராமலிங்க தேவர் கட்சியில் இருந்தார்.போர் வெடித்தபோது பிரித்தானிய அரசு அவரை 1940 ஆம் ஆண்டு கல்கத்தாவில் வீட்டுசசிறையில் அடைத்தது. இருப்பினும், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இந்தப் போர் அதிக இரத்தம் சிந்தப்பட்டுக்கொண்டிருக்கையில் தப்பிச்சென்ற அவர் ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்கு தப்பிச்சென்று பிரித்தானிய அரசுடன் போரிடுவதற்கான இராணுவத்தை உருவாக்க இரண்டாம் உலகப்போர் அச்சு நாடுகளிடம் உதவி கோரினார். இங்கே அவர் இர்வின் ரோமலின் இந்தியப் போர்க்கைதிகளை வைத்து இந்திய தேசிய இராணுவம் என்று பிரபலமான இராணுவத்தை உருவாக்கினார். பிரித்தானிய அரசுடன் போரிடுவதற்கு விடுதலைப் படையை உருவாக்குதல் என்ற போஸின் இளம்பருவ கனவினுடைய கருத்தாக்கமாக இது வந்துசேர்ந்தது. சுதந்திர அரசாங்கமாகவுள்ள ஆஸாத் ஹிந்த் அரசாங்கம் என்று பிரபலமான இயக்கத்தை சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கினார். 

Answered by Anonymous
0

Answer:

இந்தியத் தேசிய இராணுவம் (Indian National Army – INA) என்பது இரண்டம் உலகப் போரின் போது பிரித்தானிய இந்திய அரசினை எதிர்த்துப் போரிட தென்கிழக்காசியாவில் உருவாக்கப்பட்ட ஒரு படை. இது சப்பானியப் பேரரசின் உதவியுடன் இந்தியாவின் காலனிய அரசை எதிர்த்துப் போரிட்டது. ஆரம்ப காலத்தில் சப்பானியர்களால் கைது செய்யப்பட்ட பிரித்தானிய இந்திய இராணுவத்தின் இந்திய போர்க்கைதிகள் இதில் இடம் பெற்றிருந்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்த சென்றவர்கள் ஆகிய தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர்.

இந்தியத் தேசிய இ

Similar questions