Essay on nature in tamil
Answers
Answer:
இயற்கை ( ஒலிப்பு) (nature) என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடுஎன்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம். உயிரினம், உயிரின அறிவு போன்றவையும் இயற்கையில் அடங்கும். பொதுவாக இயற்கையை ஆய்வு செய்வதென்பது அறிவியலின் மிகப்பெரிய ஒரு பகுதியாகும். மனிதர்களும் இயற்கையின் ஒரு பகுதியே ஆவர். மற்ற இயற்கை நிகழ்வுகளிலிருந்து மனிதனின் நடத்தைகள் முற்றிலும் வேறுபட்ட தனியான ஒரு பிரிவு என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. இயற்கை என்ற சொல்லுகு ஆங்கிலத்தில் நேச்சர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. நேட்சுரா என்ற இலத்தீன் சொல்லின் அடிப்படையில் தருவிக்கப்பட்டதுதான் நேச்சர் என்ற ஆங்கில சொல்லாகும். இதன் பொருள் அவசிய குணங்கள், பிறவிக்குணம் என்பதாக அறியப்படுகிறது. பண்டைய இலக்கியங்களில் பிறவி அல்லது பிறப்பு என்று இதற்கு பொருள் கொள்ளப்பட்டிருந்தது.
கிரேக்க சொல்லான பிசிசு என்பதின் இலத்தீன் மொழிபெயர்ப்பே நேச்சுரா என்பதாகும். தாவரங்கள், விலங்குகள், மற்றும் உலகிலுள்ள பிற உயிரினங்கள் அனைத்தும் தங்கள் சொந்த விருப்பத்தில் உருவாக்கிக் கொள்ளும் உள்ளார்ந்த பண்புகளுடன் இச்சொல் தொடர்புடையதாகும.
ஒட்டுமொத்தமாய் இயற்கை என்பது அண்டத்தின் இயற்பியல் என்று கருதப்படுகிறது. அண்டத்தின் இயற்பியல் என்ற சொல் பல்வேறு வகைகளில் விரிவான பொருள்களைக் கொண்டது ஆகும். இவையாவும் படிப்படியாக வளர்ந்து நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் பெற்று அழியாமல் நிலைத்திருக்கின்றன. கடந்த பல நூற்றாண்டுகளில் நவீன அறிவியல் முறைகளிலும் அண்டத்தின் இயற்பியல் என்ற பொருளின் பயன்பாடு அதிகரித்தவண்னம் உள்ளது [4][5].
நேச்சர் என்ற சொல்லின் பல்வேறு பயன்பாடுகளுக்கு மத்தியில் இச்சொல்லின் பொருள் பெரும்பாலும் நிலவியல் மற்றும் வனவியல் என்ற பொருள்களையும் குறிப்பதாக உள்ளது. தாவரங்கள் மற்றும் விலங்குகள் வாழும் பொது உலகத்தை இயற்கை என்ற சொல் குறிப்பதாகவும் கருதலாம். மற்றும் சில சந்தர்ப்பங்களில் உயிரற்ற பொருட்களுடன் தொடர்புடைய செயல்முறைகளுக்கு, அதாவது புவியின் வெப்பநிலை மற்றும் நிலவியல் போன்றவற்றுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட வகை பொருட்கள் எவ்வாறு நிலைபெறுகின்றன மற்றும் அச்செயல்முறைகளுக்கேற்ப எவ்வாறு அவை தம்மை மாற்றிக் கொள்கின்றன என்பது தொடர்பான கருத்துகளையும் உள்ளடக்கியதாக இயற்கை பொருள் கொள்ளப்படுகிறது.
இது பெரும்பாலும் "இயற்கைச் சூழல்" அல்லது வனாந்தர-காட்டு விலங்குகள், பாறைகள், காடு என்ற பொருளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. பொதுவாக மனித இடையீட்டினால் மிகுதியாக மாற்றியமைக்கப்படாத பகுதி என்றும், அல்லது அந்தப்பகுதிகளில் மனித தலையீடு நிகழாத பகுதியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. . உதாரணமாக, உற்பத்தி பொருள்களும் மனித தொடர்புகளும் பொதுவாக இயற்கையின் பகுதியாக கருதப்படுவதில்லை. இயற்கை இயற்பியல் உலகின் தோற்றப்பாடுகளையும், உயிர்வாழ்இனங்களையும் குறிக்கிறது. இயற்கை மற்றும் செயற்கை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பண்டைய காலம் முதல் இன்றுவரை இயற்கை புரிந்து கொள்ளப்பட்டு வந்துள்ளது. இது, அணுவிலும் சிறிய துகள்கள்சார்ந்தனவாகவோ அல்லது நாள்மீன்பேரடைகளைப் போல் மிகப் பெரிய அளவு சார்ந்தனவாகவோ இருக்கலாம்.
Please mark this anwser as BRAINLEAST
Answer:
இயற்கை என்பது நம்மைச் சூழ்ந்துள்ள அனைத்தும் ஆகும். நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து நாம் உண்ணும் உணவு வரை அனைத்தும் இயற்கையே. இயற்கை நம்மை மகிழ்ச்சியடையச் செய்வதோடு நாம் ஆரோக்கியமாக வாழ இதமான சூழலை வழங்குகிறது.
பலவிதமான அழகான பூக்கள், கவர்ச்சிகரமான பறவைகள், விலங்குகள், பச்சை தாவரங்கள், நீல வானம், நிலம், ஓடும் ஆறுகள், கடல், காடுகள், காற்று, மலைகள், பள்ளத்தாக்குகள், மற்றும் பலவற்றை இயற்கை நமக்கும் அளித்திருக்கிறது.
நம் வாழ்க்கைக்காக நாம் பயன்படுத்தும் அனைத்தும் இயற்கையின் சொத்துக்கள். எனவே அவற்றை பாதுகாக்கவேண்டும் தவிர சேதப்படுத்தக்கூடாது.
இயற்கையின் அசல் தன்மையை நாம் எப்போதுமே அழிக்கக்கூடாது. அதேபோல், சுற்றுச்சூழல் சுழற்சியில் ஏற்றத்தாழ்வுகள் செய்யக்கூடாது. நம் இயல்பாக வாழ்வதற்கும் அனுபவிப்பதற்கும் அழகான சூழலை நமக்கு வழங்கியிருக்கிறது. எனவே அதை எல்லா சேதங்களிலிருந்தும் விலக்கி வைத்திருப்பது நமது பொறுப்பு. நவீன சகாப்தத்தில், மனிதனின் பல சுயநல நடவடிக்கைகள் இயற்கையை பெருமளவில் தொந்தரவு செய்துள்ளன. ஆனால் நாம் அனைவரும் இயற்கையின் அழகை பராமரிக்க முயற்சிக்க வேண்டும்.