இலெமூரியாவை _________ நாகரீகத் தொட்டில் என்பர்.
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
தொன்மைத் தமிழகம்
Answers
Answered by
0
விடை:
இலெமூரியாவை மனித நாகரீகத் தொட்டில் என்பர்.
விளக்கம்:
தமிழ்நாடு தொன்மையும் சிறப்பும் வாய்ந்தது. முதல் மாந்தன் தோன்றிய இலெமூரியாவை மனித நாகரீகத் தொட்டில் என்பர். குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு.
தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர். ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத கருத்து.
Similar questions