India Languages, asked by StarTbia, 1 year ago

தமக்குவமையில்லா ஒரு ________ தமிழினம்
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
தொன்மைத் தமிழகம்

Answers

Answered by gayathrikrish80
0

விடை:


தமக்குவமையில்லா ஒரு தனி இனம் தமிழினம்


விளக்கம்:


தமிழினம் தமக்குவமையில்லா ஒரு தனி இனம்.  உலக நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் சிறந்த பங்களிப்பினைத் தமிழ்மொழி வழங்கியிருக்கிறது. உலகில் உள்ள உயரிய மனித இனத்தின் மரபுச் செல்வமாக விளங்குகிறது. உணவு, உடை, விருந்து, ஈகை, பொறை, நடுவு நிலைமை, அருள் ஆகிய பண்புகளால் தமிழர் சிறந்திருந்தனர். 


பண்டைய தமிழர் உழவையும் தொழிலையும் மதித்தனர்; ஆடவர் வினையை உயிராய்க் கருதினர். பழந்தமிழரின் வாழ்வு அறத்தின் அடிப்படையில் அமைந்தது. அவர்கள் அறத்தின் வழியே பொருளை ஈட்டினர்; இன்பத்தை எட்டினர். அதனால் பண்டைய தமிழர்க்கு வீடு என ஒன்று வேண்டாததாயிற்று.

Similar questions