பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்.
1திருவாசகம் 2திருக்குறள் 3தேவாரம்
உரிய விடையைத் தேர்த்தெழுதுக
தொன்மைத் தமிழகம்
Answers
Answered by
10
விடை:
பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் தேவாரம்
விளக்கம்:
தமிழர் வாழ்வில் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் இசையே முதன்மை பெறுகிறது. குழந்தையைத் தொட்டிலிலிட்டுப் பாடும் தாலாட்டு முதல் இறப்பிற்கு பாடும் ஒப்பாரி வரை அனைத்தும் இசையே. இன்றைய கர்நாடக இசைக்குத் தாய் நம் தமிழிசையே.
பண்ணொடு தமிழொப்பாய் என்று தொடங்கும் தேவாரம், பண்ணும் தமிழும் பிரிக்க முடியாதவை என்று கூறும். தமிழர், ஐவகை நிலத்திற்கும் ஐந்திணைக்கும் ஏற்ற பண்ணிசை வகுத்தனர்; தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி எனப் பல்வேறு இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இன்புற்றனர். குழலினிது யாழினிது என்று இசை பொழியும் கருவிகளை வள்ளுவம் குறிக்கின்றது. இதன்மூலம் தமிழிசை தொன்மையும் சிறப்பும் பெற்றிருந்ததை அறியலாம்.
Similar questions
Hindi,
7 months ago
Science,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Math,
1 year ago