India Languages, asked by StarTbia, 1 year ago

மனித இனத்தின் மரபு செல்வமாக தமிழ்மொழி விளங்குகிறது
சந்திப்பிழை நீக்கி எழுதுக / Correct the sentence
தொன்மைத் தமிழகம்

Answers

Answered by gayathrikrish80
1

விடை:

மனித இனத்தின் மரபுச்  செல்வமாகத் தமிழ்மொழி விளங்குகிறது.


விளக்கம்:


சொல்லோடு  விகுதியும்  மற்றொரு  சொல்லும்  சேரும் போது ஏற்படும் மாற்றங்களைச் 'சந்தி' என்பர். வாக்கியத்தில் ஏற்படும் பொருட் குழப்பத்தை நீக்கித் தெளிவைக் காக்கச் சந்தி இலக்கணம் ஒரு இன்றியமையாத கருவி ஆகும்.


எடுத்துக்காட்டாக, 1. மரபுச் செல்வம் என்பதற்குப் பதிலாக மரபுசெல்வம் என்று எழுதினால் பொருள் மாறுபடுகிறது. 2. பட்டு சேலை உடுத்தினாள் என்றால் பட்டு எனும் பெண் சேலை உடுத்தினாள் என்று பொருள் அதே சந்தி சேர்க்கும் போது பட்டுச்சேலை உடுத்தினாள் என்று கூறும் போது பொருள் மாறுபடுகிறது.


மேலும், மொழியில் வழிவழியாகக் காக்கப்பட்ட மரபு காக்கப்படுவதற்குச் சந்தி உதவி புரிகிறது. 

Similar questions