India Languages, asked by StarTbia, 1 year ago

சீறாப்புராணத்தை இயற்றியவர் ______________
கோடிட்ட இடத்தை நிரப்புக / Fill in the blanks
சீறாப்புராணம்

Answers

Answered by gayathrikrish80
2

விடை:


சீறாப்புராணத்தை இயற்றியவர் உமறுப்புலவர்



விளக்கம்:



உமறுப் புலவர், முகம்மது நபி அவர்களின் வரலாற்றை அடியொற்றித் தமிழ் இலக்கிய மரபிற்கேற்பச் சீறாப் புராணம் என்ற காப்பியத்தைப் பாடியவர். உமறுப் புலவர் 1630 ஆண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி பிறந்தார். உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சேகு முதலியார் என அழைக்கப்பெற்ற செய்கு முகம்மது அலியார் ஆவார். இவர் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பணியாற்றினார்.



செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் படியே உமறுப் புலவர் சீறாப்புராணத்தை எழுதத் தொடங்கினார். நூல் முற்றிலும் நிறைவடையும் முன்னரே சீதக்காதி இறந்து விட்டார். பின் அபும் காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவு பெற்றது. உமறுப்புலவர் முதுமொழிமாலை என்ற எண்பது பாக்களால் ஆகிய நூலையும் படைத்தளித்துள்ளார்.


Similar questions