GST பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது? i) GST ‘ஒரு முனைவரி’ ii) இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை ந�ோக்கமாகக் க�ொண்டுள்ளது iii) இது ஜூலை 1, 2017 முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டது. iv) இது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும். அ) (i) மற்றும் (ii) சரி ஆ) (ii), (iii) மற்றும் (iv) சரி இ) (i), (iii) மற்றும் (iv) சரி ஈ) மேற்கூறிய அனைத்தும் சரியானவ
Answers
(i), (iii) மற்றும் (iv) சரி
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST)
- பண்டங்கள் அல்லது பணிகளை நுகர்வோர் வாங்கும் போது விதிக்கப்படும் வரியே பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST) ஆகும்.
- பண்டங்கள் மற்றும் பணிகள் வரி ஆனது ஜூலை 1, 2017 அன்று நடைமுறைக்கு வந்து செயல்பட்டு வரும் ஒரு வகை மறைமுக வரி ஆகும்.
- இதன் நோக்கம் மத்திய மற்றும் மாநில அரசினால் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் அனைத்து மறைமுக வரிகளையும் மாற்றுவது ஆகும்.
- GST வரி ஆனது பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி மற்றும் வழங்குதல் மீதான வரிகளின் அடுக்கு விளைவுகளை நீக்க உதவுகிறது.
- GST வரி ஆனது ஒரு முனை வரி ஆகும்.
- GST வரி ஆனது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கிறது.
Explanation:
சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax; GST) ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இது அரசியலமைப்பு சட்டம் 2017 (நூற்று இருபத்து இரண்டாம் திருத்தச் சட்டம்)-ஆக அறிமுகமாகிறது. இந்த ச.சே.வரியானது ஜிஎஸ்டி சபை மற்றும் அதன் தலைவர் மத்திய நிதி அமைச்சர் இந்தியா – அருண் ஜெட்லியினால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ச.சே.வரி-யின் கீழ், சரக்கு மற்றும் சேவைகளானது பின்வரும் விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது அவை: 0%, 5%, 12%, 18%, 28% ஆகும். கடினமான விலைமதிப்பற்ற கற்கள் மீது 0.25% சிறப்பு விகிதமும் வடிவமற்ற அரைகுறைவான கற்கள் மற்றும் தங்கம் மீதும் 3% வரி விதிக்கப்பட்டுள்ளது.
படிமம்:The President Launching Goods and Services Tax (GST) on 1st July 2017.webmஊடகத்தை ஓடவிடு
இந்திய குடியரசு தலைவர் சரக்கு மற்றும் சேவை வரி(GST)யை ஜீலை 1 2017 அன்று அறிமுகம் செய்கிறார்.
ச.சே. வரியானது 1 ஜூலை 2017 நள்ளிரவு முதல் துவக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி மற்றும் எதிர்க் கட்சிகள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது