. வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில்
எவை சரியானவை?
(i) இயக்கத்தன்மை உடையது.
(ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும்
பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்.
(iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையை
அடைவதில்லை.
(iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை
பொருள்களில் செறிவு வேறுபடலாம்.
அ) (i), (ii) மற்றும் (iii) ஆ) (i), (ii) மற்றும் (iv)
இ) (ii), (iii) மற்றும் (iv) ஈ) (i), (iii) மற்றும் (iv).
Answers
Answered by
0
(i), (ii) மற்றும் (iii)
வேதி சமநிலை
- ஒரு மீள் வேதிவினையின் வினைபடு பொருள் மற்றும் வினை விளைப் பொருளின் செறிவில் எந்தவிதமான மாற்றமும் நிகழாத நிலை வேதி சமநிலை ஆகும்.
- மீள் வினையின் தொடக்கத்தில் முன்னோக்கு வினையின் வேகம் பின்னோக்கு வினையின் வேகத்தினை விட அதிகமாக இருக்கும்.
- ஆனால் வினை நடைபெறும் போது வினைபடு பொருளின் செறிவு குறையும்.
- வினை விளை பொருளின் செறிவு அதிகரிக்கும்.
- வினையின் வேகம் ஆனது செறிவிற்கு நேர்விகித தொடர்பில் இருப்பதால் முன்னோக்கு வினையில் வினைபடு பொருளின் செறிவு நேரத்தினை பொருத்து குறைகிறது.
- அது போலவே வினைவேகமும் குறைகிறது.
- இதை முறையில் பின்னோக்கு வினையின் வினை வேகம் அதிகரிக்கிறது.
Similar questions