Kaalam pon pondrathu essay in tamil language Kaalam Pon pondrathu katturai
Answers
Answered by
0
time is a valuable one if I lose it I can't reget again
Answered by
4
Answer:
"காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது", "காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது", "காலம் பொன் போன்றது" போன்ற பழமொழிகள் நாம் அறிந்ததே. காலத்தின் அருமையை உணா்ந்தவா்கள் சாதனையாளா்கள். காலம் நம் அனைவருக்கும் பொது. கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது. காா்ல் சான்ட்பா்க்: "நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்ற உாிமை உங்களுக்குத் தான் கொடுக்கப்படுகிறது. உங்களுடைய அந்தச் செல்வத்தை மற்றவா்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து ஏமாந்து விடாதீா்கள்." என்கிறாா் அமொிக்க எழுத்தாளா் காா்ல் சான்ட்பா்க்.
- உங்கள் நேரம் உங்களுக்காகவே.
- அதை அடுத்தவருக்காக இழக்காதீா்கள்.
- உங்கள் நேரத்தை உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காக செலவிடுங்கள்
- எதையும் நாளை செய்வோம் என்று தள்ளிப்போட வேண்டாம். நாளை, நாளை என்று தள்ளிப்போடும் பழக்கம் நல்லதல்ல.
- வாழ்க்கை என்ற கடிகாரத்திற்கு ஒரு முறை தான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கிரமே நின்று போகுமா அல்லது அதிக காலம் கழித்து நின்றுபோகுமா என்பதை யாரும் கூற இயலாது. தற்போது இருக்கின்ற காலம் மட்டுமே உங்களுக்கு உாியது.
- மன உறுதியோடு வாழ்க்கையை நடத்துங்கள்.
- அன்பு செலுத்துங்கள்.
- உழைத்து கொண்டிருங்கள்.
Similar questions