kalangarai vilakkam katturai in tamil write and take a pic a send meit was
Answers
வெளிச்ச வீடு), கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக ஒளி உமிழும் விளக்குகள் பொருத்தி கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள உயர்ந்த கோபுரம் போன்ற அமைப்புக்களைக் குறிக்கும். இதை வெளிச்சவீடு எனவும் அழைப்பதுண்டு. முற்காலத்தில் இக் கலங்கரை விளக்கங்களில் தீயும் விளக்குகளும் ஒளி மூலங்களாக பயன்பட்டன. பிற்காலங்களில் கலங்கரை விளக்கங்களில், நவீன தெறிப்பிகளுடன் கூடிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.கலங்கரை விளக்குகள், ஆபத்தான கரைப் பகுதிகளையும், பவளப் பாறைகள் நிறைந்த இடங்களைக் குறித்துக் காட்டுவதற்காகவும், துறைமுகங்களுக்கான பாதுகாப்பான நுழை வழிகளைக் குறிப்பதற்காகவும் பயன்பட்டன. ஒரு காலத்தில் பெருமளவில் பயன்பாட்டிலிருந்த கலங்கரை விளக்கங்களின் தேவை இன்று அருகி வருகிறது. பல வகையான மின்னணுவியல் வழிசெலுத்தல் கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், செயற்படும் கலங்கரை விளக்கங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.