நம் உடலில் அதிகமான அளவு காணப்படும் நீளமான “L” செல்கள் ஆகும். “L”செல்களில் நீண்ட கிளைத்த பகுதி”M” என்றும், குறுகிய கிளைத்த பகுதிகள் ”N” என்றும் அழைக்கப்படும். இரண்டு “L” செல்களுக்கிடையேயான இடைவெளி பகுதி “O” என்று அழைக்கப்படும். இந்த இடைவெளிப் பகுதியில் வெளியிடப்படும் வேதிப்பொருளான “P” நரம்புத் தூண்டலை கடத்த உதவுகிறது. i. “L” செல்களின் பெயரை கூறுக. ii. “M”மற்றும் ”N’ என்பவை யாவை? iii “O” என்னும் இடைவெளி பகுதியின் பெயர் என்ன? iv. “P” எனப்படும் வேதிப் பொருளின் பெயரை கூறுக.
Answers
Answered by
0
Explanation:
which language do u write
Answered by
0
L - நியூரான்கள் அல்லது நரம்பு செல்கள்
- நம் உடலில் அதிகமான அளவு காணப்படும் நீளமான செல்கள் நியூரான்கள் அல்லது நரம்பு செல்கள் ஆகும்.
- மேலும் நரம்பு மண்டலத்தின் அமைப்பு மற்றும் செயல் ரீதியான அடிப்படை அலகுகள் நியூரான்கள் அல்லது நரம்பு செல்கள் ஆகும்.
M - ஆக்சான்கள்
- நியூரான்கள் அல்லது நரம்பு செல்களின் மிக நீண்ட கிளைத்த பகுதி ஆக்சான்கள் ஆகும்.
N - டெண்ட்ரைட்டுகள்
- நியூரான்கள் அல்லது நரம்பு செல்களின் குறுகிய கிளைத்த பகுதி டெண்ட்ரைட்டுகள் ஆகும்.
O - சினாப்டிக் இணைவுப் பகுதி
- சினாப்டிக் இணைவுப் பகுதி என்பது இரு நியூரான் செல்களுக்கு இடையே உள்ள இடைவெளிப் பகுதி ஆகும்.
P - நியூரோடிரான்ஸ்மிட்டர்கள்
- சினாப்டிக் இணைவுப் பகுதியில் இருந்து வெளியிடப்படும் நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் அல்லது நரம்புணர்வு கடத்திகள் ஆனது நரம்புத் தூண்டலை கடத்த உதவுகிறது.
Similar questions