௭துகையால் meaning in tamil
Answers
Answered by
0
யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.
அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை
அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்
என்பது தொல்காப்பியர் கூற்று.
எடுத்துக்காட்டு :
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
இக்குறளில் "நீந்துவர்" "நீந்தார்" ஆகிய இரண்டு சீர்களில் உள்ள இரண்டாம் எழுத்து "ந்" ஒன்றாக அமைவதால் இங்கு எதுகை சுட்டிக் காட்டப்படுகின்றன.
Similar questions